மதிமுக அவைத் தலைவர் காரை தடுத்து நிறுத்தி போலீஸ் கைது
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
மதிமுகவின் அவைத் தலைவரும் மதிமுகவில் நம்பர் டூவான எல்,கணேசன் நேற்று இரவு அரியலூரில் கைது செய்யப்பட்டார்.
வைகோ கைது செய்யப்பட்டால் நடத்த வேண்டிய போராங்கள் குறித்து பல்வேறு மாவட்டத் தலைவர்களுடனும் இவர் ஆலோசனைநடத்தினார்.
பின்னர் வைகோவை வரவேற்பதற்காக அவர் சென்னைக்கு காரில் புறப்பட்டார். இது குறித்து சென்னை காவல்துறை தலைமையகத்துக்குதகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரை வழிமறித்துக் கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து அரியலூர் அருகே வந்த அவரது காரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அவருடன் வந்த மதிமுகவினரும் கைது செய்யப்பட்டனர்.
இவருடன் மேலும் பல மதிமுகவினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்மூலம் மதிமுகவினரின் போராட்டங்களை ஒடுக்க மாநில அரசுநடவடிக்கை எடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications