வைகோ கைதுக்கு பா.ஜ.க., ராமதாஸ் எதிர்ப்பு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைதுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கைது குறித்து இன்று காலை நிருபர்களிடம் பேசிய ராமதாஸ்,
பொடா சட்டத்தின் கீழ் வைகோவை கைது செய்வதன் மூலம் அந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டவுள்ளது. பேச்சு சுதந்திரத்துக்குஎதிரான வன்முறைச் செயல் இது.
ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பை ஆதரிப்பதற்கும், அவர்களுக்கு உதவி செய்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. விடுதலைப் புலிகளுக்குஆதரவான கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றமே சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது.தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் தாக்கல் செய்த மனுவில் அந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.
புலிகள் மீதான தடையை விலக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கோருகிறது. புலிகளை ஒதுக்கிவிட்டு இலங்கைத் தமிழர்களின்பிரச்சனையை தீர்த்துவிட முடியாது.
சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகியதாகக் கூறி சிவகாமி வின்சென்ட், முருகவேல்ராஜன் ஆகிய இருஎம்.எல்.ஏக்களையும் சபாநாயகர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். சபாநாயகர் சரியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தில்
வழக்குத் தொடருவோம் என்றார் ராமதாஸ்.
பா.ஜ.க.:
இதே போல பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயாளரும் செய்தித் தொடர்பாளருமான அருண் ஜேட்லியும் இந்த கைதுக்கு எதிர்ப்புதெரிவித்துள்ளார். ஒரு தடை செய்யப்பட்ட அமைப்புக்கு எதிராக தான் பேசிய பேச்சு குறித்து வைகோ விளக்கம் தந்துவிட்டார்.
இலங்கையில் தான் புலிகளை ஆதரிக்கிறார். தமிழகத்தில் அல்ல. இதனால் அவரைக் கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை என்றார்.
பொடாவைப் பொறுத்தவரை அது மாநில அரசின் உரிமை. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. ஆனால், பா.ஜ.க. இந்தக் கைதைஎதிர்க்கும்.
இந்தச் சட்டத்தை அரசியல் லாபத்துக்காக ஜெயலலிதா பயன்படுத்தியிருந்தால் அது குறித்து வைகோ நீதிமன்றத்தில் போராடுவார் என்றார்ஜேட்லி.
-->
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications