அகதிகளை தவிக்க விட்ட இலங்கை.. காப்பாற்றிய இந்தியப் படை
ராமநாதபுரம்:
இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தவிக்க விடப்பட்ட அகதிகளை இந்திய கடலோரக் காவல் படை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தது.
யாழ்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த 6 அகதிகள் ஒரு படகில் ராமேஸ்வரத்துக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களைஇலங்கைக் கடற்படை வழிமறித்தது. பின்னர் தனுஷ்கோடியில் இந்திய கடல் பகுதியில் நுழைந்த இலங்கைக் கடற்படையினர் இந்தஅகதிகளை இரண்டாம்திட்டை என்ற சிறிய தரைப் பகுதிக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.
பின்னர் அவர்களின் படகையும் எடுத்துக் கொண்டு நடுக்கடலில் தவிக்க விட்டுவிட்டு இலங்கை கடற்படையினர் சென்றுவிட்டனர்.
இதனால் நேற்று இரவு முழுவதும் இந்த 6 அகதிகளும் கடும் குளிரிலும், சூறாவளிக் காற்றிலும் அந்தக் குட்டித் தீவில் தங்கியிருந்தனர்.
இந் நிலையில் இன்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படையினர் இந்த 6 பேரும் தீவுப் பகுதியில் அரை மயக்கத்தில்இருப்பதைக் கண்டு அவர்களை மீட்டனர். தங்கள படகில் உணவையும் முதலுதவியும் தந்த கடலோரக் காவல் படையினர் இவர்களைமண்டபம் அகதி முகாமில் கொண்டு வந்து சேர்த்தனர்.
இந்தியக் கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஊடுருவது அதிகரித்து வருவதாக உளவுப் பிரிவினர் மத்திய அரசிடம்தெரிவித்துள்ளனர். தமிழக மீனவர்களும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளனர்.
வைகோ கைது காரணமாக மண்டபம் உள்ளிட்ட பல்வேறு அகதி முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நடமாட்டம்,செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க மாநில போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications