நாளை ஜகன்னாதர் ரத யாத்திரை: குஜராத்தில் பெரும் பீதி
அகமதாபாத்:
அகமதாபாத்தில் நாளை ஜகன்னாதர் ஆலயத்தின் ரத யாத்திரை நடக்கவுள்ளதையொட்டி குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் அச்சமும்பீதியும் பரவியுள்ளது.
அம் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த மதக் கலவரங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். வீடுகளை இழந்த லட்சக்கணக்கானமக்கள் முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்த முகாம்களை அரசு மூட ஆரம்பித்துள்ளதால் வீடுகளுக்குத் திரும்பியுள்ள பலரும்அச்சத்துடன் தான் வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் அங்கு ஜகன்னாதர் ஆலய ரத யாத்திரை நடக்கவுள்ளது. இதையடுத்து மாநிலம் முழுவதும் மிக பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.
வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வந்த முன்னாள் பஞ்சாப் டி.ஜி.பி. கேபிஎஸ். கில் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளன.
பேரணியில் ரதங்களைப் பாதுகாக்க கமாண்டோக்கள் நிறுத்தப்படவுள்ளனர். ரத யாத்திரை நடக்கும் பாதைகளில் ஏற்கனவே மோப்பநாய்களைக் கொண்டு சோதனைகள் தொடங்கிவிட்டன.
5000 போலீசார், மத்திய ரிசர்வ் போலீசார், ஆர்.ஏ.எப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் ஆகியோர் இந்த ரத யாத்திரைநடக்கும் 35 கி.மீ. தூரத்தை பாதுகாக்க உள்ளனர்.
ரத யாத்திரை நடக்கும் பாதையில் உள்ள பகுதிகளில் சிறுபான்மையினர் வசிக்கும் குடியிருப்புகளுக்கு பலத்த பாதுகாப்புப்போடப்பட்டுள்ளது.
ஆனாலும் ஆயிரக்கணக்கான சிறுபான்மையின மக்கள் அச்சம் காரணமாக வீடுகளை பூட்டிவிட்டு முகாம்களுக்கும், வேறு இடங்களுக்கும்செல்ல ஆரம்பித்துவிட்டனர். நாளை வெள்ளிக்கிழமை எனபதால் தொழுக்ைகாக சிறுபான்மையினர் மசூதிகளில் கூடுவர்.
ரத யாத்திரை நடக்கும்போது தொழுகை நடத்த வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ள பல மசூதிகள், வெள்ளிக்கிழமை தொழுகைவழிபாட்டை 2 மணிக்கு முன்னதாகவேநடத்திவிடத் திட்டமிட்டுள்ளன.
சிறுபான்மையினர் குடியிருப்புப் பகுதிகளில் வசிப்பவர்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என அந்தச் சமுதாயத் தலைவர்கள் தங்கள்மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த யாத்திரையை காரணமாக வைத்து மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என்ற அச்சம் இந்துக்கள், முஸ்லீம்கள் என அனைத்துத் தரப்புமக்களிடமும் பரவியுள்ளது.
இந்த யாத்திரை பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. ஆனால்,சமீபத்தில் வரலாறு காணாத அளவில் பெரும் மதக் கலவரம் நடந்ததால் மக்களிடையே இம்முறை அச்சமும் பீதியும் பரவியுள்ளது.












Click it and Unblock the Notifications