மதிமுகவை தடை செய்ய முடியாது: ஜெவுக்கு பா.ஜ.க. காட்டமான பதில்
டெல்லி:
மதிமுகவைத் தடை செய்ய முடியாது என பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள மதிமுக மீது தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக நாங்களும் எதிர் நடவடிக்கையில்இறங்குவோம் என பா.ஜ.க. அறிவித்துள்ளது.
அக் கட்சியின் தலைவர் வெங்கையா நாயுடு நிருபர்களிடம் பேசுகையில்,
ஜனநாயக நாட்டில் ஒரு அரசியல் கட்சியை இன்னொரு அரசியல் கட்சியின் தலைவர் தடை செய்துவிட முடியாது. எனக்குத் தெரிந்து இந்தநாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியும் தடை செய்யப்படதே இல்லை.
எங்கள் கூட்டணியில் இருக்கும் வைகோ மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். இதற்கு எதிர் நடவடிக்கையில் நாங்களும்இறங்குவோம்.
மிக அசாதாரணமான சூழ்நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய பொடா சட்டத்தை தமிழக அரசு மிகத் தவறாகப்பயன்படுத்தியிருக்கிறது என்றார்.
அக் கட்சியின் பொதுச் செயலாளரான அருண் ஜேட்லி கூறுகையில், இந்திய சட்டப்படி அரசியல் கட்சியை யாரும் தடை செய்துவிடமுடியாது. மதிமுகவை யாரும் தடை செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications