வைகோவைக் காண வழியெங்கும் காத்திருந்த மக்கள்
வேலூர்:
மதுரை சிறையில் இருந்து வேலூர் கொண்டு வரப்பட்ட வைகோவுக்கு வழி முழுவதும் மக்கள் திரண்டிருந்து ஆதரவு தெரிவித்தனர்.
பல இடங்களிலும் சாலையின் இரு புறங்களிலும் மக்கள் கூடி நின்று அவரைக வழியனுப்பினர். வைகோவும் பல இடங்களில் மக்களைப்பார்த்து கையசைத்தார்.
ஆனால், அந்த போலீஸ் வேனில் ஜன்னல்களில் இரும்பு வலை போடப்பட்டிருந்தால் வைகோவை மக்களால் சரியாகப் பார்க்கமுடியவில்லை.
முன்னால் 2 போலீஸ் ஜீப்கள் சைரன் ஒலித்துக் கொண்டு செல்ல மூன்றாவதாக ஒரு போலீஸ் வேன் செல்ல 4வது வாகனமாக வைகோவின்வேன் சென்றது.
டிரைவருக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அவர் எந்த போலீசாருடனும் பேசவில்லை. மிகவும் அமைதியாக அமர்ந்திருந்தார்.அவருடன் இருக்கையில் யாரும் அமரவும் இல்லை. அவருக்கு பின் இருக்கைகளில் தான் போலீசார் அமர்ந்திருந்தனர்.
வைகோவின் வேனுக்குப் பின்னால் 3 வேன்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் சென்றனர். திருச்சி எஸ்.பி. அலுவலகத்தில் குளித்துவிட்டுகாலை உணவருந்திய வைகோவுக்கு போளூரில் மதிய உணவு வழங்கப்பட்டதாகத் தெரிகிறது.
சிகாக்கோவில் இருந்து மும்பை வந்து அங்கிருந்து சென்னை வந்து உடனே வேனில் மதுரை சென்று அங்கிருந்து உடனே வேலூர் கொண்டுசெல்லப்பட்டார் வைகோ. ஆனால், முகத்தில் களைப்போ, கவலையோ இல்லாமல் இருந்தார். கிட்டத்தட்ட 57 மணி நேரம் தொடர் பயணம்செய்துள்ளார். போலீஸ் வேனில் தொடர்ந்து 20 மணி நேரம் 900 கி.மீ. தூரத்தைக் கடந்துள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications