வைகோ விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம்: மேனகா புகார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக முன்னாள் மத்தியஅமைச்சர் மேனகா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராஜிவ் காந்தியின் தம்பியான சஞ்சய் காந்தியின் மனைவி மேனகாவுக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் எப்போதும்ஒத்துப்போனதில்லை. இதனால், மேனகா காந்தி காங்கிரசுக்கு எதிரான அணியிலேயே இருந்து வருகிறார்.

வாஜ்பாய் அமைச்சரவையில் வன விலங்குகள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மேனகா காந்தி சமீபத்தில் நீக்கப்பட்டார். தான் பதவி நீக்கம்செய்யப்பட்டது குறித்து இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்காமல் இருந்து வந்த மேனகா இப்போது மத்திய அரசைக் கடுமையாகத்தாக்கியுள்ளார்.

மத்திய அரசைத் தாக்க அவர் வைகோ விவகாரத்தை கையில் எடுத்துள்ளார்.

இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒவ்வொரு விவகாரத்திலும் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது. இரு முகங்களைக் காட்டுகிறது. ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதஇரு வேறு நிலைகளை எடுக்கிறது. இதனால் அனைத்துக் கட்சிகளும் குழப்பத்தில் ஆழ்கின்றன.

வைகோ விவகாரம் இதற்கு ஒரு நல்ல உதாரணம்.

வைகோவை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தது சரி என்றால் மதிமுக அமைச்சர்கள் இருவரையும் மத்திய அரசு உடனே பதவி நீக்கம்செய்ய வேண்டும். அவரைக் கைது செய்தது சரி என்றால் மதிமுக கட்சியே தேச விரோத கட்சியாகிவிடுகிறது.

அதே நேரத்தில் மத்தியில் மதிமுக அமைச்சர்கள் பதவியில் இருப்பது தவறில்லை என்று மத்திய அரசு கருதினால், வைகோவை உடனேவிடுதலை செய்ய வேண்டும். அவரை பொடா சட்டத்தில் கைது செய்தது சரியில்லை என்று அறிவிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவது சரியல்ல. பொடா சட்டம் பயன்படுத்தப்பட்டிருப்பது சரியா இல்லையாஎன்பதை அரசு தெளிவாக்கியாக வேண்டும்.

வைகோ கைது செய்யப்பட்டது சரியா இல்லையா என்று கேட்டால், பொடா அதிகப்படியாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றுஉதாவக்கரை பதில்களைச் சொல்வதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

இவ்வாறு மேனகா காந்தி கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+