15ம் தேதி பரோலில் வெளியே வருகிறார் வைகோ: ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கிறார்
சென்னை:
வரும் 15ம் தேதி ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பரோலில் விடுவிக்கப்படுகிறார்.
இதற்கான அனுமதியை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டுமானால் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறவேண்டும் என தேர்தல் கமிஷன் கூறியது.
இதையடுத்து இதற்காக தன்னை பரோலில் விடுவிக்கக் கோரி வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாமை முன் மொழிந்தவர்களில் நானும் ஒருவன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமைஉண்டு. இதனால் என்னை பரோலில் வெளியே விட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த விவகாரத்தில் மாநில அரசின் நிலையை நீதிமன்றம் கோரியது. ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வைகோவை பரோலில்விடுவிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என அரசு வழக்கறிஞர் கூறினார். அதே நேரத்தில் அன்றைய தினம் வெளியேவந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்கவோ, கோஷம் போடவோ கூடாது என்றார்.
இதையடுத்து வைகோவை 15ம் தேதி பரோலில் சிறையில் இருந்து வெளியே அனுப்ப தமிழக அரசுக்கு நீதிபதி கனகராஜ்உத்தரவிட்டார்.அவர் சென்னையில் தலைமைச் செயலகத்தில் வைக்கப்படும் ஓட்டுப் பெட்டியில் வாக்களிப்பார்.
-
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications