நாளை மறுதினம் ஜனாதிபதி தேர்தல்: தமிழகத்தில் தீவிர ஏற்பாடுகள்
டெல்லி:
ஜனாதிபதி தேர்தல் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தமிழகத்தில் தீவிரமாக நடந்து வருகின்றன.
இப்போதைய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனின் பதவிக் காலம் இம் மாதம் அடுத்த மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து இம்மாதம் 15ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. எம்.பிக்கள் லோக்சபாவிலும் எம்.எல்.ஏக்கள் அந்தந்த மாநிலசட்டசபைகளிலும் வாக்களிக்கலாம். சட்டசபைகளில் வாக்களிக்க விரும்பும் எம்.பிக்கள் தேர்தல் கமிஷனிடம் அதற்கான முன்அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்.
இதன்படி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்ஆகியோர் உள்பட 8 எம்.பிக்களும் சட்டசபையில் வாக்களிக்க அனுமதி பெற்றுள்ளனர்.
தமிழக சட்டசபையின் சட்டமன்றக் குழு அலுவலகத்தில் இந்த வாக்குப் பதிவு எந்திரம் வைக்கப்பட்டிருக்கும். காலை 10 மணி முதல் மாலை5 மணி வரை வாக்குப் பதிவு நடக்கும். இதன் பின்னர் இந்த வாக்குப் பதிவு எந்திரம் விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பப்படும்.
வாக்கு எண்ணிக்கை வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். தமிழகத்தில் இந்தத் தேர்தலுக்கான பார்வையாளராக மத்திய உள்துறைஅமைச்சக செயலாளர் சுரேந்திர நாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய ஜனநாயககக் கூட்டணி, காங்கிரஸ், சமாஜ்வாடிக் கட்சி, லல்லுவின் ராஷ்ட்ரீய ஜனதா தள் உள்ளிட்ட பெரும்பான்மையானவாக்குகள் கொண்ட கட்சிகளின் ஆதரவுடன் டாக்டர் அப்துல் கலாமும், இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவுடன் கேப்டன் லட்சுமி செகலும்போட்டியிடுகின்றனர்.
அப்துல் கலாமின் வெற்றி உறுதியாகிவிட்டது. இந் நிலையில் மனு தாக்கல் செய்துவிட்டு கடந்த 3 வாரங்களாக தமிழகத்தின் பல்வேறுபகுதிகளில் பள்ளிகளில் சுற்றுப் பயணம் செய்து வந்த அப்துல் கலாம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அடுத்தமுறை ஜனாதிபதியாகத் தான் அவர் தமிழகம் வருவார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications