பொடா சட்டத் திருத்தம்: பிரதமரின் முடிவுக்கு கருணாநிதி வரவேற்பு
சென்னை:
பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க அதில் திருத்தங்கள் கொண்டு வர தேசிய ஜனநாயக முன்னணி முடிவுசெய்திருப்பததை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
இந்தச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி வைகோவை தமிழக அரசு கைது செய்திருப்பதாகக் கூறியுள்ள தேசிய ஜனநாயக முன்னணி,இனிமேல் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க சட்டத்தைத் திருத்தவும் முடிவு செய்துள்ளது.
நேற்று பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், முரசொலி மாறன், ஜஸ்வந்த் சிங்,யஷ்வந்த் சின்ஹா மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் பிரநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இம் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த முடிவுக்கு திமுக தலைவர் கருணாநிதி வரவேற்பு தெரிவித்துள்ளார். இன்று நிருபர்களிடம் பேசிய கருணாநிதி,
நேற்று பிரதமர் தலைமையில் நடந்த கூட்டத்தில் எங்கள் கட்சியின் கருத்துக்களை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டோம். அந்தச்சட்டத்தில் திருத்தங்கள் மிக அவசியமாகிறது. அப்போது தான் இச்சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும் என்றார்.
பொடா சட்டத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது என்று அந்தச் சட்டத்தை ஆதரிக்கும்போதே நாங்கள்குறிப்பிட்டோம். பொடா சட்டத்தின் கீழ் மதிமுகவை தடை செய்வது குறித்து அத்வானியும், பா.ஜ.கவும் வெவ்வேறு கருத்துக்களைதெரிவிக்கின்றனர். இந்த விஷயத்தில் அத்வானி தான் விளக்கம் தர வேண்டும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை:
இந் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோவுக்கு அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்து தர வேண்டும் என இந்தியகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகணணு கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், வைகோவைக் கைது செய்துள்ள ஜெயலலிதா வன்முறையைத் தூண்டும் பஜ்ரங் தள், விஸ் ஹிந்து பரிஷத் போன்றஅமைப்புகளை தடை செய்யத் தயாரா?. பொடா சட்டத்தை ஆதரிக்காதீர்கள் என்று பலமுறை அனைத்துக் கட்சிகளையும் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால், அதை மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரித்தன.
புலிகளுக்கு ஆதரவாகப் பேசிய ஒரே காரணத்துக்காக வைகோவை கைது செய்திருப்பது சரியல்ல. அரசியல்ரீதியில் வைகோவைபழிவாங்கத் தான் ஜெயலலிதா இந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications