வைகோ கைது குறித்து தே.ஜ. கூட்டணி தலைவர்களுடன் பேசுவேன்: ராமதாஸ்
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்பெர்னாண்டசுடன் பேசப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
பா.ம.கவின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னையில் உள்ள அக் கட்சியின் தலைவர் ஜி.கே. மணியில் இல்லத்தில் நடைபெற்றது. இதில் 17பா.ம.க. எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் ராமதாஸ் பேசுகையில்,
பொடா சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை இருந்தும் கூட அதை மதிக்காமல் முதல்வர் ஜெயலலிதா நடந்துகொண்டுள்ளனர். வைகோவைக் கைது செய்துள்ளது குறித்தும் அதற்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் பேசுவேன்.
வைகோவை 30 மணி நேரம் போலீஸ் வேனில் ஏற்றி அலைகழித்துள்ளனர் போலீசார். அவருக்கு பேன் கூடத் தராமல் சிறையில்கொடுமைப்படுத்தி வருகின்றனர்.
எங்கள் கட்சியை உடைக்க அதிமுக தொடர்ந்து முயன்று தோல்வி கண்டு வருகிறது. எங்கள் கட்சியில் இருந்து விலகிய சிவகாமிவின்சென்ட், முருகவேல் ராஜன் ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தும் எந்தப் பலனும்ஏற்படவில்லை.
இதனால், சபாநாயகருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றார் ராமதாஸ்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications