முரசொலி மாறன் திடீர் உடல் நலக்குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமாகிய முரசொலிமாறனுக்கு நேற்று இரவு கடும் ரத்தக் கொதிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று இரவு ரத்தக் கொதிப்பு காரணமாகப் பெரிதும் சிரமப்பட்ட மாறன் உடனடியாக டெல்லியில் உள்ள அகிலஇந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (எய்ம்ஸ்) சேர்க்கப்பட்டார்.
மாறனுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது குணமடைந்து வருகிறார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவர் தொடர்ந்து ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றுடாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications