வேனில் வைகோவுக்கு உணவு தரவில்லை: வக்கீல்கள் புகார்-- - ஓ.பி. மறுப்பு
வேலூர்:
சென்னையில் இருந்து மதுரை சிறைக்கும், மதுரை சிறையில் இருந்து வேலூர் சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டபோதுவைகோவுக்கு போலீசார் உணவு தரவில்லை என்று கூறப்படுகிறது..
வைகோவை சென்னையில் இருந்து இரவில் மதுரை சிறைக்கு வேனில் கொண்டு சென்றபோதும், மதுரை சிறையில் இருந்துவேலூருக்கு மறுநாள் பகலிலும் இழுத்தடித்தபோதும் அவருக்கு போலீசார் உணவும் தண்ணீரும் தரவில்லை என்று வைகோவின்வழக்கறிஞர் கூறியுள்ளார்.
சென்னையில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டபோது அவருக்கு உளுந்தூர்பேட்டையில் உணவு தரப்பட்டதகாக முன்னதாகபோலீசார் கூறினர். ஆனால், உணவு தரப்படவில்லை என வைகோ தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார்.
அதுவும் கூட நாங்கள் திரும்பத் திரும்பக் கேட்டபோது தான் அதை வைகோ எங்களிடம் சொன்னார் என வழக்கறிஞர்கள்கூறியுள்ளனர். அவரிடம் உணவு குறித்து கேட்டபோது, முதலில் போலீசாரைக் காட்டிக் கொடுக்க விரும்பாமல் அமைதியாகஇருந்தார். நாங்கள் சந்தேகப்பட்டு திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கேட்டபோது தான் உணவு தராததைச் சொன்னார் எனவைகோவின் வழக்கறிஞர்கள் கூறினர்.
ஆனால், உணவு தரப்பட்டதாக சிறைத்துறையை கவனிக்கும் பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்ச்ெலவம் கூறியுள்ளார்.இன்று இது குறித்து ஓ.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையில் இருந்து மதுரைக்கும் மதுரையில் இருந்து வேலூருக்கும் அழைத்துச் செல்லப்பட்டபோது வைகோவுக்கு உணவுதரப்படவில்லை என்று சொல்வது பொய்யான செய்தி.
சென்னையில் இருந்து மதுரை சென்ற போது உளுந்தூர்பேட்டையில் உணவு தரப்பட்டது. மதுரையில் இருந்து வேலூர் கொண்டுசெல்லப்பட்டபோது திருச்சியில் காலை உணவு தரப்பட்டது.
2.30 மணிக்கு வழியில் மதிய உணவு தரப்பட்டது. ஆனால், அதை அவர் உண்ண மறுத்துவிட்டார். சிறை உணவே போதும், அதைசிறையில் போயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார் என்று ஓ.பி. கூறியுள்ளார்.
வைகோவுக்கு பேன் தரப்படாத விவகாரத்திலும் ஓ.பி தான் அறிக்கை விட்டார். உணவு விஷயத்திலும் அவர் இன்னொருஅறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications