பிறந்து 2 நாளான குழந்தைக்கு மூச்சுக் குழாய் ஆபரேஷன்: அரசு டாக்டர்கள் சாதனை
தூத்துக்குடி:
பிறந்து 2 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தையின் மூச்சுக் குழாயும் உணவுக் குழாயும் ஆபரேஷன் மூலம் தனித்தனியாகப் பிரித்தெடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு அருகே குமாரகிரியைச் சேர்ந்த ராஜகோபால்-பத்ரகாளி தம்பதிக்கு சமீபத்தில்தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
அந்தக் குழந்தையோ பால் குடிக்கும் போது மூச்சு விடுவதற்கு மிகவும் திணறியது. இதைக் கண்டு பதறிப் போனபத்ரகாளி டாக்டர்களிடம் கூறினார்.
டாக்டர்கள் குழந்தையைப் பரிசோதித்த போது அதன் உணவுக் குழாயுடன் மூச்சுக் குழா பின்னிப் பிணைந்திருந்ததுதெரிய வந்தது. இதனால் தான் பால் குடிக்கும் போது அது மூச்சு விடுவதற்கு மிகவும் திணறியுள்ளது.
ஆனால் பிறந்து இரண்டே நாட்கள் மட்டுமே ஆகியிருந்த அந்தக் குழந்தைக்கு ஆபரேஷன் செய்ய அந்தத் தனியார்மருத்துவமனை டாக்டர்கள் மறுத்து விட்டனர்.
இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அந்தக் குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது.
சுமார் 3 மணி நேரம் இந்த ஆபரேஷனைச் செய்த அரசு டாக்டர்களான சுவாமிநாதன் மற்றும் விஜய சேகர்ஆகியோர் அந்தக் குழந்தையின் மூச்சுக் குழாயுடன் இணைந்திருந்த உணவுக் குழாயைத் தனியாகப் பிரித்துபிரதான உணவுக் குழாயுடனேயே இணைத்து விட்டனர்.
ஆபரேஷன் வெற்றிகரமாகச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தற்போது குழந்தை மிகவும் ஆரோக்கியமாக உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications