2 தலைகள், 3 கால்கள், 2 இதயம், ஒரு சிறுநீரகம்... சென்னையில் பிறந்த அதிசய குழந்தை
சென்னை:
2 தலைகள், 3 கால்கள், 2 இதயம், ஒரு சிறுநீரகம், ஒரு கல்லீரல் மற்றும் ஒரே ஒரு ஆண் உறுப்புடன் சென்னைகீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
ஆனால் இந்தக் குழந்தையை என்ன செய்வது, எப்படிக் காப்பாற்றுவது என்று அதன் பெற்றோர் பரிதவித்தபடிடாக்டர்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை பாடியைச் சேர்ந்த வீரப்பன்-இந்திரா(23) தம்பதிக்குத் தான் இந்தக் குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்திற்காகக் கடந்த 11ம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இந்திராவை ஸ்கேன் செய்து பார்த்த போதுஇரட்டைக் குழந்தை கருவில் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அந்தக் குழந்தைகளின் உடல் உறுப்புகள்வளர்ச்சியடையாமல் இருப்பதையும் டாக்டர்கள் கண்டனர்.
இதையடுத்து ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். கடந்த 12ம் தேதி ஆபரேஷன் நடந்தது.குழந்தைகளும் உயிருடன் வெளியே கொண்டுவரப்பட்டது. அப்போது தான் அது ஒரு குழந்தை என்றும் அதற்கு 2தலைகள், 3 கால்கள், 2 இதயம், ஒரு சிறுநீரகம், ஒரு கல்லீரல் மற்றும் ஒரு ஆண் உறுப்பு இருப்பது தெரிய வந்தது.
குழந்தையை உடனடியாக எழும்பூரில் உள்ள குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதயம் தனித்தனியாக இருந்து எலும்புகளும் இணையாமல் இருந்தால் இந்தக் குழந்தையை இரட்டைக் குழந்தையாக்கி பிரித்துவிடலாம் என்று கூறும் டாக்டர்கள் அடுத்த கட்ட ஆபரேஷனுக்கு தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.
பிறக்கும் 50 ஆயிரம் குழந்தைகளில் ஒன்று தான் இது போல் ஒட்டிப் பிறப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றுகூறப்படுகிறது. மேலும் இவ்வாறு ஒட்டிப் பிறந்த குழந்தைகள் தொடர்ந்து 4 நாட்களாக உயிருடன் இருப்பதேஅதிசயம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
தனித் தனியாகப் பிரித்துக் கொடுக்க முடிந்தால் கொடுங்கள். இப்படி இரட்டைத் தலையுடன் உள்ள குழந்தையைவைத்துக் கொண்டு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று டாக்டர்களிடம் அதன் தாய் இந்திரா பரிதாபமாகக்கூறினார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications