சிறையில் வைகோவுடன் மனைவி, மகன், தாணு சந்திப்பு
டெல்லி:
பொடா சட்டத்தில் வைகோ கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வது குறித்து சட்டநிபுணர்களுடன் மதிமுக ஆலோசனை நடத்தி வருகிறது.
அக் கட்சியின் மத்திய அமைச்சர்களான செஞ்சி ராமச்சந்திரனும், கண்ணப்பனும் கடந்த இரு நாட்களாக பல்வேறு சட்டநிபுணர்களை நேரில் சந்தித்து விவாதித்து வருகின்றனர்.
மதிமுக வழக்குத் தொடரும்போது அது தொடர்பாக மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்கும். அப்போது தரும்விளக்கத்தின் அடிப்படையிலும், நீதிமன்றம் தரும் உத்தரவின் அடிப்படையிலும் பொடா சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுமுடிவு செய்துள்ளது.
சிறையில் வைகோ- மனைவி சந்திப்பு:
இந் நிலையில் நேற்று சிறையில் வைகோவைச் சந்தித்தார் அவரது மனைவி ரேணுகா தேவி. மகன் வையாபுரி, ரேணுகா தேவிதவிர, வைகோவின் அக்காள் ராஜலட்சுமி, மருமகன் ஆனந்தன், மருமகன் கார்த்திகேயன், தம்பி ரவியின் மகன் ராஜேஷ் ஆகியோர்சந்தித்துப் பேசினர்.
கிட்டதட்ட ஒரு மணிநேரம் இந்தச் சந்திப்பு நீடித்தது. அவர்களுடன் மிக உற்சாகமாக வைகோ பேசியதாக மகன் கூறினார்.
வைகோவின் மனைவி ரேணுகா தேவி கூறுகையில், என் கணவர் கைது செய்யப்பட்டது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை.அவர் நியாயமானவர். தர்மம் தான் இறுதியில் வெல்லும் என்றார்.
கலைப்புலி தாணு சந்திப்பு:
பின்னர் வைகோவை திரைப்படத் தயாரிப்பாளரும் தீவிரமான வைகோ ஆதரவாளருமான கலைப்புலி தாணு, மதிமுகவின் அவைத் தலைவர் எல்.கணேசன்ஆகியோரும் சந்தித்துப் பேசினர்.
பின்னர் வெளியே வந்த எல்.கணேசன், பொடா சட்டத்தில் மாற்றம் வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். தொண்டர்கள் தீக்குளிப்புபோன்ற மனம் வேதனை தரும் செயல்களில் ஈடுபடக் கூடாது. இதை வைகோவும் சரி மதிமுக நிர்வாகிகளும் சரி மிகக் கடுமையாக எதிர்க்கிறோம்என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications