பொடாவை தவறாக பயன்படுத்திய தமிழக அரசு கலைக்கப்படலாம்: இளங்கோவன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்திய தமிழக அரசு கலைக்கப்படலாம் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர்இளங்கோவன் கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

புலிகளை ஆதரித்த வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் தான். புலிகளை ஆதரிக்கும் மதிமுக உள்ளிட்டகட்சிகளைத் தடை செய்யும் ஜெயலலிதாவின் நடவடிக்கையையும் ஆதரிக்கிறோம். ஆனால், வைகோவை பொடா சட்டத்தில்கைது செய்ய வேண்டுமா என்பது தான் கேள்வி. இந்தச் சட்டத்தை மிகத் தவறாக ஜெயலலிதா பயன்படுத்தியுள்ளார். இதனால்,தமிழக அரசு கலைக்கப்பட வாய்ப்புள்ளது.

காமராஜர் போல ஆட்சி நடத்தப் போவதாக ஜெயலலிதா பேசுகிறார். அவர் அண்ணா, எம்.ஜி.ஆர். மாதிரியாவது ஆட்சி நடத்தவேண்டும். வெறும் பேச்சு உதவாது.

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு மாதிரி அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும். அதைவிட்டுவிட்டுஎடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஜெயலலிதா முடிவுகளை எடுப்பது மாநிலத்தின் நலனுக்கு நல்லதல்ல.

வாழப்பாடியின் ராவடி...

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்க்கப்பட்ட வாழப்பாடி ராமமூர்த்தி கட்சிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இதனால்,அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதலில் காங்கிரஸ்- த.மா.கா. இணைப்பை குறை கூறியவர், இப்போது மிகக் கேவலமாகப் பேசி வருகிறார். கட்சியில் குழப்பம்செய்ய ஆரம்பித்திருக்கிறார். மேலும் காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சியிலும் அவர் தனது குழப்பத்தைஆரம்பித்துவிட்டார்.

மேலும் கர்நாடகத்தில் கிருஷ்ணா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை கலைக்க வேண்டும் என்றும் பேசுகிறார். இதனால்,அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் அவர் விமர்சித்து வருகிறார். இதனால்தலைமையுடன் கலந்து பேசி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் இளங்கோவன்.

வாழப்பாடியை மீண்டும் காங்கிரசில் சேர்த்ததில் இளங்கோவனுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், கட்சிக்குள் வந்த சிலமாதங்களிலேயே வாழப்பாடி தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்துள்ளார்.

நேற்று விருதுநகரில் பேசிய இளங்கோவன், கருணாநிதியைக் கைது செய்தபோதே ஜெயலலிதாவின ஆட்சியைக் கலைத்திருக்கவேண்டும். அவரை அப்போது விட்டு வைத்ததால் இப்போது என்னென்வொ செய்து கொண்டுள்ளார் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+