அண்டை வீட்டினருடன் செக்ஸ்: ஆய்வில் திடுக் தகவல்
சேலம்:
எய்ட்ஸ் பயம் காரணமாக தமிழகத்தில் விலை மாதர்களிடம் ஆண்கள் போவது வெகுவாகக் குறைந்துவிட்டதாகவும், ஆனால் பக்கத்து வீட்டுப் பெண்களிடமும் உடன் பணிபுரியும் பெண்களிடமும் உறவு வைத்துக்கொள்வது அதிகரித்துள்ளதாகவும் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் நடந்த பெண் முன் மாதிரி கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட சென்னை எய்ட்ஸ் தடுப்பு மற்றும்கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (அபெக்ஸ்) ஆய்வாளரான டாக்டர் லட்சுமிபாய் இதனைத் தெரிவித்தார். மாநாட்டின்முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எய்ட்ஸ் நோய் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து மக்களிடம் விளக்குவதையே ஒரே குறிக்கோளாகக்கொண்டு கடந்த 1996ம் ஆண்டு அபெக்ஸ் சென்னையில் தொடங்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் எய்ட்ஸ் தொடர்பான ஆய்வுகளை நடத்தினோம். அதில்பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பல்வேறு விலை மாதர்களிடம் உறவு வைத்துக் கொள்வதால் லாரி டிரைவர்களுக்குத் தான் அதிக அளவில் எய்ட்ஸ்நோய் பாதிப்புக்கு ஆளாகின்றனர் என்பதைக் கண்டுபிடித்தோம்.
பின்னர் அந்த டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல அறிவுரைகளை வழங்கினோம். அதன்படிவிபச்சாரிகளிடம் செல்லும் லாரி டிரைவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது.
அதையும் மீறி விலைமாதர்களிடம் செல்லும் டிரைவர்களில் 80 சதவீதம் பேர் நிரோத் உள்ளிட்ட ஆணுறைகளைப்பயன்படுத்துகின்றனர் என்ற விவரமும் கிடைத்துள்ளது. இதையடுத்து எய்ட்ஸ் நோயின் தாக்குதலிலிருந்துஏராளமான டிரைவர்கள் தப்பி உள்ளனர்.
இந்திய அளவில் கணக்கிடும் போது தமிழகத்தில் 1.3 சதவீதம் வரை எய்ட்ஸ் நோய் பரவியுள்ளது.
எய்ட்ஸ் நோய் பயம் ஆரம்பித்த காலத்திலிருந்தே விலை மாதர்களிடம் செல்லும் நபர்களின் எண்ணிக்கையும்வெகுவாகக் குறையத் தொடங்கியது. அப்போது தான் மற்றொரு முக்கியமான "திடுக்" தகவல் வெளியானது.
அண்டை வீட்டில் இருக்கும் பெண்களை மயக்கி அவர்களுடன் உடல் உறவில் ஈடுபடும் ஆண்களின் எண்ணிக்கைதமிழகத்தில் அதிகரித்து வருவதை எங்கள் ஆய்வு உறுதி செய்துள்ளது
பக்கத்து வீட்டுப் பெண்கள் தவிர அலுவலகத்திலோ அல்லது தொழிற்சாலையிலோ தங்களுடன் பணிபுரியும்பெண்களுடனும் உறவு வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் பெண்களை ஏமாற்றியும், மிரட்டியுமே இந்த வக்கிரம் மிகுந்த ஆண்கள் தங்கள் இச்சைகளுக்குப்பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இது போன்ற கொடுமைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுவதற்கு பெண் முன்மாதிரி கல்வியாளர்கள்ஊக்குவிக்கப்படுவார்கள்.
எங்கள் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பெண் முன்மாதிரி கல்வியாளர்களை நாங்கள் பயன்படுத்தி எய்ட்ஸைமட்டுமில்லாமல் பெண்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமைகளையும் ஒழிப்பதற்குத் திட்டங்களைத் தீட்டிவருகிறோம் என்றார் டாக்டர் லட்சுமிபாய்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications