தெரு சண்டை போடும் இளங்கோவன்- வாழப்பாடிக்கு சோனியா டோஸ்
டெல்லி:
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இளங்கோவனும், கட்சியில் சமீபத்தில் இணைந்த வாழப்பாடி ராமமூர்த்தியும் ஒருவரைஒருவர் திட்டி அறிக்கை விட்டு வருவதை காங்கிரஸ் தலைமை கண்டித்துள்ளது.
இருவரும் சேர்த்து கட்சியின் பெயரைக் கெடுப்பதாகவும் மானத்தை வாங்குவதாகவும் டோஸ் விடப்பட்டுள்ளது.
இளங்கோவன் உதவியால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்த வாழப்பாடி ராமமூர்த்தி வழக்கம் போல் தனி கோஷ்டி நடத்தி வருகிறார்.பெரும்பாலும் வன்னியர்களைக் கொண்ட இவரது கோஷ்டி இளங்கோவனுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
மூப்பனார் காலத்தில் இருந்தே தனியாக கோஷ்டி நடத்தி வரும் வாழப்பாடி ராமமூர்த்திக்கும் பிற காங்கிரஸ் தலைவர்களுக்கும்எப்போதும் ஒத்துப் போனதில்லை. ஆனால், பிரிந்து கிடக்கும் அனைத்து காங்கிரஸ் கட்சிகளும் இணைய வேண்டும் என்று குரல்கொடுத்து அதற்கான முயற்சிகளிலும் இறங்கி ராஜிவ் காங்கிரஸ் நடத்திக் கொண்டிருந்த வாழப்பாடியை மீண்டும் காங்கிரசில்இணைத்தார் இளங்கோவன்.
அதே போல தமிழ் மாநில காங்கிரசை மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைக்க முயற்சி எடுத்தார். அதில் வெற்றியும் கண்டுள்ளார்.
ஆனால், மூப்பனாரையும் அவரது கட்சியையும் எப்போதும் விமர்சித்து வந்த வாழப்பாடி இப்போது இந்த இணைப்பை எதிர்த்துபேசி வருகிறார். இதையடுத்து அவருக்கு விளக்கம் கேட்ட நோட்டீஸ் அனுப்பினார் இளங்கோவன்.
ஆனால், சோனியாவுக்கு மிக நெருக்கமான அர்ஜூன் சிங்கின் ஆசி பெற்ற வாழப்பாடி ராமமூர்த்தி அவர் மூலமாக இப்போதுஇளங்கோவனை சோனியாவிடம் போட்டுக் கொடுத்துள்ளார்.
இதையடுத்து இளங்கோவனை அடக்கி வைக்குமாறு கட்சியின் தமிழக விவகாரங்களை கவனிக்கும் ரமேஷ் சென்னிதலாவுக்குசோனியா உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இளங்கோவனுடன் தொலைபேயில் தொடர்பு கொண்டு பேசிய சென்னிதலா,சோனியாவின் அதிருப்தியை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
கட்சியின் மாநிலத் தலைவராக இருந்து கொண்டு கட்சியில் இருக்கும் இன்னொரு மூத்த தலைவருக்கு எதிராக அறிக்கை விடுவது,பேட்டி தருவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என இளங்கோவனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல வாழப்பாடி ராமமூர்த்தியுடனும் சென்னிதலா பேசினார். கட்சி எடுக்கும் முடிவுகளுக்குக் கட்டுப்படுவதைவிட்டுவிட்டு வாய்த் துடுக்காக வாசனையும், மூப்பனாரையும் இன்னும் திட்டிக் கொண்டிருப்பது தவறு என்று வாழப்பாடியிடம்எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை இருவரும் பேசித் தீர்க்க வேண்டும் எனவும், டிவி, இன்டர்நெட், பத்திரிக்கை செய்தி நிறுவனங்கள் மூலம்இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி கட்சியின் மானத்தையும், கண்ணியத்தையும் கெடுக்கக் கூடாது என்று இருவருக்கும்சென்னிதலா மூலமாக கட்சித் தலைமை கிளாஸ் எடுத்துள்ளது.
காங்கிரஸ் என்றாலே கோஷ்டியும் சண்டையும் தானே. கோஷ்டி சண்டை இல்லாமல் காங்கிரஸ் ஏது?
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications