கடும் மழையால் அமர்நாத் யாத்திரை தற்காலிக நிறுத்தம்
ஜம்மூ:
கடுமையான குளிருடன் பலத்த மழையும் பெய்து வருவதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாகநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் சுமார் 7,000 பக்தர்கள் தங்கள் யாத்திரையைத் தொடர முடியாமல் ஜம்மூவில்தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக மிகப் பலத்த பாதுகாப்புடன் கடந்த 19ம் தேதி அமர்நாத் யாத்திரைஜம்மூவில் தொடங்கியது. ஜம்மூவிலிருந்து அமர்நாத் குகை வரை வழி நெடுகிலும் பக்தர்களின் பாதுகாப்புக்காகராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறு சிறு குழுக்களாக பக்தர்கள் ஜம்மூவிலிருந்து கிளம்பிக் கொண்டிருக்கின்றனர். இதுவரை 10,297 பக்தர்கள்ஜம்மூவிலிருந்து கிளம்பிச் சென்று விட்டனர். சுமார் 7,000 பக்தர்கள் நேற்றும் இன்றும் கிளம்புவதாக இருந்தது.
ஆனால் நேற்று பகல்காமைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடும் குளிருடன் பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது.இந்நிலையில் பக்தர்கள் தங்கள் யாத்திரையை மேற்கொண்டால் பல இடங்களில் வழுக்கி விடும் சூழ்நிலைஏற்படலாம்.
இதையடுத்து இந்த 7,000 பக்தர்களின் அமர்நாத் யாத்திரைப் பயணம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஓரிரு நாட்களில் காலநிலை சீரான பிறகு அவர்கள் பயணத்தைத் தொடங்கலாம் என்று பக்தர்களுக்குஅதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அது வரை பக்தர்கள் ஜம்மூவில் உள்ள அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தங்குவதற்கானஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் சிவ லிங்க தரிசனம்:
இதற்கிடையே கடந்த 19ம் தேதி அமர்நாத் யாத்திரை கிளம்பிய முதல் குழுவினர் 500 பேர் இன்று புனித குகையைஅடைந்தனர்.
பின்னர் அங்குள்ள சிவ லிங்கத்தை தரிசனம் செய்து வழிபட்டனர். இந்த சிவ லிங்கம் இயற்கையிலேயேஉருவானதாகக் கருதப்படுகிறது.
யாத்திரையாக வந்த 2வது குழுவைச் சேர்ந்த பக்தர்களும் இன்றைக்குள்ளாகவே சுவாமி தரிசனம் செய்வார்கள்என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications