நாடாளுமன்றத்தில் குஜராத் அமளி: அவைகள் ஒத்தி வைப்பு
டெல்லி:
குஜராத்தில் உடனடியாகத் தேர்தல் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் இன்று எதிர்க் கட்சிகள் பிரச்சனைகிளப்பின. அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து ஆளும் பா.ஜ.க. உறுப்பினர்களுக்கும் எதிர்க் கட்சியினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து லோக்சாவும் ராஜ்யசபாவும் ஒத்தி வைக்கப்பட்டன.
குஜராத்தில் இரு தினங்களுக்கு முன் சட்டசபை கலைக்கப்பட்டது. அங்கு ஆட்சியில் இருந்த நரேந்திர மோடி தலைமையிலானஅமைச்சரவை பதவியை ராஜினாமா செய்தது. சட்டசபையை கலைக்கவும் கோரியது. இதையடுத்து சட்டசபையை ஆளுநர்கலைத்தார்.
அங்கு மதக் கலவரங்கள் நடந்து முடிந்துள்ள சூழலில் உடனடியாக தேர்தல் நடத்தினால் தனக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்இருப்பதாக பா.ஜ.க. கருதுகிறது. ஆனால், அங்கு உடனே தேர்தல் நடத்தக் கூடாது என எதிர்க் கட்சிகள் கூறுகின்றன. அங்குமுதலில் ஜனாதிபதி ஆட்சியை அமலாக்க வேண்டும் எனவும் தேர்தல் முடியும் வரை நரேந்திய மோடியை முதல்வர் பொறுப்பில்இருக்க அனுமதிக்கக் கூடாது எனவும் எதிர்க் கட்சிகள் கோருகின்றன.
இந்த விவகாரம் இன்று ராஜ்யசபாவில் வெடித்தது. காலையில் அவை கூடியதும் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்துவிட்டு குஜராத்குறித்து விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் கோரியது.
முதலில் பேசிய காங்கிரஸ் தலைவர் மன்மோகன் சிங், குஜராத்தில் மதக் கலவரத்தை தூண்டிவிட்டு நடத்திய நரேந்திர மோடியின்கண்காணிப்பில் அங்கு தேர்தல் நடத்த அனுமதிக்க முடியாது. சிறுபான்மை மக்களை வீடுகளை விட்டு விரட்டி முகாம்களில் தங்கவைத்து வேடிக்கை பார்த்து வரும் மோடியிடம் இருந்து ஆட்சிப் பொறுப்பை பறிக்க வேண்டும். முதலில் அங்கு ஜனாதிபதிஆட்சியை அமலாக்க வேண்டும். அதன் பின்னர் நிலைமை சகஜமான பிறகு தான் தேர்தல் நடத்த வேண்டும். இன்று இது குறித்துப்பேச வேண்டும் என்றார்.
ஆனால், இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கும் பா.ஜ.கவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அவையில் அமளி உருவானது.
இதையடுத்து அவையை ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியுமான கிருஷ்ணகாந்த் 2 மணி நேரத்துக்கு ஒத்தி வைத்தார்.மீண்டும் அவை கூடியதும் பிரச்சனை உருவானதால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
லோக்சபாவிலும் இதே போன்ற கோரிக்கையை எதிர்க் கட்சிகள் கிளப்ப அங்கும் பா.ஜ.க.- காங்கிரஸ் இடையே மோதல்உருவானது. கூச்சல்- குழப்பத்தால் அவையை நடத்த முடியாததால் அதை ஒரு மணி நேரம் ஒத்தி வைப்பதாக சபாநாயகர்அறிவித்தார். பின்னர் அவை கூடியது. மீண்டும் அதே பிரச்சனையை எதிர்க் கட்சிகள் கிளப்ப அவையில் கூச்சல் ஏற்பட்டது.இதையடுத்து அவையை நாள் முழுவதும் ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மனோகர் ஜோஷி அறிவித்தார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications