ஒரு வாரக் குழந்தை ரயிலிலிருந்து வீசி கொடூர கொலை

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

விருதுநகரில் பிறந்து ஒரு வாரமே ஆன நிலையில் இருந்த ஒரு பச்சிளம் ஆண் குழந்தை ரயிலிலிருந்து வீசப்பட்டுகொடூரமாகக் கொலை செய்யப்பட்டது.

நெஞ்சை உறைய வைக்கும் இந்தக் காட்சியைக் கண்டு ரயிலில் பயணம் செய்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மானாமதுரையிலிருந்து செங்கோட்டை நோக்கி நேற்று ஒரு ரயில் புறப்பட்டது. அப்போது 50 வயது மதிக்கத்தக்கஒரு ஆணும் சுமார் 20 வயதுள்ள ஒரு பெண்ணும் ஒரு கைக்குழந்தையுடன் அந்த ரயிலில் ஏறினர். அந்த ஆணின்கையில் குழந்தை இருந்தது.

விருதுநகர் புதிய பஸ் நிலையம் அருகே ரயில் மெதுவாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு லுங்கியோடு சேர்த்துக்கட்டப்பட்ட நிலையில் அந்தக் குழந்தையை அந்த நபர் வெளியே தூக்கி வீசினார். பின்னர் அந்தக் குழந்தையின்மற்ற துணிகளையும் அவர் வீசி எறிந்தார்.

இந்தக் காட்சியை நேரில் கண்ட ரயில் பயணிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் அதற்குள் ரயில் வேகம்பிடித்து ஓடத் தொடங்கியது.

இருந்தாலும் அந்த ஆணையும் பெண்ணையும் ரயில் பயணிகள் பிடித்துக் கொண்டனர். சிவகாசியில் ரயில்நின்றவுடன் அவர்களை ரயில்வே போலீசாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.

இதையடுத்து உடனே விருதுநகர் ரயில் நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அங்கிருந்த ரயில்ஊழியர்களும் விரைந்து சென்று குழந்தையைக் கண்டுபிடித்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அந்தக் குழந்தை இறந்து விட்டது. அனாதைப் பிணமாக அதுமருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே போலீசார் அந்த ஆணிடமும் பெண்ணிடமும் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களுடையமுகவரியைப் போலீசார் பெற்றுக் கொண்ட நிலையில், அந்த இருவரும் நைசாக போலீசாரிடமிருந்து தப்பிவிட்டனர்.

அந்த முகவரிக்குச் சென்று பார்த்த போது தான் அவர்கள் கொடுத்தது போலியான முகவரியைக் கொடுத்துள்ளனர்என்ற விவரமும் தெரிய வந்தது.

அவர்கள் யார், குழந்தையை எதற்காகக் கொன்றனர், அவர்கள் தான் குழந்தையின் பெற்றோரா என்று பல விடைதெரியாத கேள்விகளுடன் அவர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+