சேலத்தில் ஜெயலலிதா: ரூ.232 கோடி நலப் பணிகள் துவக்கம்
சென்னை:
இன்று காலை சேலம் சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா சுமார் ரூ.232 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களைத்துவக்கி வைத்தார்.
சென்னையிலிருந்து காலை 10 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்குப் புறப்பட்ட ஜெயலலிதா, காலை 11.30மணிக்கு சேலம் அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்து இறங்கினார்.
பின்னர் சேலத்தில் உள்ள சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நண்பகல் 12 மணிக்கு நடைபெற்ற விழாவில் ரூ.168.37கோடி மதிப்பிலான 2,439 வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டிய பின், ரூ.50.91 கோடி மதிப்பிலானபுதிய திட்டங்களையும் துவக்கி வைத்தார்.
அதன் பிறகு ரூ.12.51 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளையும் 10,683 பேருக்கு ஜெயலலிதா வழங்கினார்.
ஜெயலலிதா வருகையையொட்டி சேலம் முழுவதிலும் சுமார் 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர்.
சேலம் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இரவே ஜெயலலிதா மதுரை செல்வதாகத் தான் முதலில்திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இன்று மாலையே சென்னை திரும்பும் அவர், நாளை காலை தான் மதுரைக்குக்கிளம்புகிறார்.
மதுரை அரசு கலைக் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் நாளை கலந்து கொள்ளும் ஜெயலலிதா, சுமார்ரூ.125 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களுக்கான அடிக்கல்லை நாட்டுகிறார். அதன் பின்னர் சுமார் 7,400பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்கவுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications