""தேவையில்லாமல் ஜெ. என்னை வம்புக்கு இழுக்கிறார்"": கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற பாமக நிறுவனர் ராமதாசின் யோசனைக்குக் கண்டனம்தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கிறார் என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

ராமதாசுக்குக் கண்டனம் தெரிவித்து நேற்று அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அதில் விடுதலைப்புலிகளுக்குஆதரவாக வைகோ, ராமதாஸ், கருணாநிதி போன்றவர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளதாவது:

1960களில் பெரியார் மற்றும் அண்ணா போன்றவர்கள் தமிழுக்காகத் தனி நாடு வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார்கள்.

ஆனாலும் இந்தக் கோரிக்கையால் நாட்டுக்கே பெரும் ஆபத்து விளையும் என்று கருதிய அவர்கள் தங்கள்கோரிக்கையைக் கைவிட்டு விட்டனர்.

ஆனால் 1980க்கு மேல் தான் அரசியலுக்கே ஜெயலலிதா வந்தார். எனவே அன்றைய வரலாறு குறித்து அவருக்குத்தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

ஆனால் பெரியார், அண்ணா போல ராமதாஸ் தனி நாடு ஒன்றும் கோரவில்லை. இந்தியாவுக்குள்ளேயே புதியதமிழ் மாநிலம் வேண்டும் என்று தான் கோரியுள்ளார். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் இது நடைமுறைக்குஏற்றதாக இல்லை என்பதால் இந்தக் கோரிக்கையை நாங்களும் எதிர்த்துள்ளோம்.

இதற்கிடையே வன்னியர்களுக்கு இதற்கு முன் மத்திய அமைச்சரவையில் பதவி கொடுக்கப்படவில்லை என்றுராமதாசும் விவரம் தெரியாமல் பேசியுள்ளார்.

வன்னிய சமூகத்தைச் சேர்ந்த திமுகவின் ஜி. வெங்கடராமனுக்கு மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்துகொடுக்கப்பட்டதை அவர் மறந்து விட்டார் போலும் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று இரவு கருணாநிதி வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற ராமதாசின் கோரிக்கை நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம் என்றுஏற்கனவே நான் கூறியுள்ளேன்.

ஆனால் அதையும் மீறி தேவையில்லாம் ஜெயலலிதா என்னை வம்புக்கிழுக்கிறார். புலிகளுக்கு ஆதரவாக நான்செயல்பட்டதாகக் கூறி சந்தடி சாக்கில் என்னையும் குற்றம் சாட்டி வருகிறார்.

ஆனால் புலிகளுக்கு ஜெயலலிதாவும் அதிமுகவினரும் எவ்வளவு தூரம் ஆதரவு கொடுத்துள்ளனர் என்பதற்குஏராளமான ஆதாரங்கள் உள்ளன. புலிகளின் முக்கியத் தலைவர்களின் ஒருவரான பத்மனாபா சென்னையில்கொலை செய்யப்பட்ட போது அந்த அமைப்பைத் தீவிரமாக ஆதரித்தவர் ஜெயலலிதா.

அப்போது நான் உள்பட பல தலைவர்களும் புலிகளுக்கு உதவவில்லை என்று ஒரு பத்திரிக்கைக்குப் பேட்டியளித்தஜெயலலிதா, இப்படி புலிகளுக்கு உதவாத போக்கு நீடித்தால் தமிழகமே கொந்தளிக்கும் என்றும் கூடகூறியிருந்தார்.

புலிகள் அமைப்பினருக்கு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். பணமும் ஆயுதங்களும் கொடுத்து உதவியதற்கானஆதாரங்களும் உள்ளன. இவ்வாறு அதிமுகவினர் தான் நேரடியாகவும் மறைமுகமாகவும் புலிகளுக்கு உதவிவந்துள்ளனர்.

ஆனால் பொடா சட்டத்தைப் பயன்படுத்தி அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஜெயலலிதா,அதிலிருந்து அனைவரையும் திசை திருப்புவதற்காகவே என் மீது தேவையில்லாமல் குற்றம் சுமத்தும் வேலையில்ஈடுபட்டுள்ளார் என்று அவ்வறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+