மாறனுக்கு இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை முடிந்தது
டெல்லி:
மத்திய அமைச்சரும் திமுக தலைவர்களில் ஒருவருமான முரசொலி மாறனுக்கு இன்று இருதய வால்வு மாற்று அறுவை சிகிச்சைநடந்தது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவரது உடல் நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம் நெஞ்சு வலி காரணமாக அவர் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறினர்.
இதையடுத்து இன்று இந்த அறுவை சிகிச்சை நடந்தது. அவரது இருதய வால்வு மாற்றப்பட்டது. டாக்டர்கள் வேணுகோபால்,தல்வார் அடங்கிய குழு இந்த அறுவை சிகிச்சையை செய்தது.
அவர் ஒரு வார காலம் மருத்துவமனையில் ஓய்வில் இருப்பார் என்று தெரிகிறது. டாக்டர் வேணுகோவால் தான் இந்தியாவிலேயேமுதல்முறையாக இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications