குறைய ஆரம்பிக்கிறது இந்திய மக்கள் தொகை பெருக்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவில் மக்கள் தொகை பெருக்க விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது. 1981-91ம் ஆண்டுகளில் 2.14 சதவீதமாக இருந்தமக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 1991-2001ம் ஆண்டில் 1.93 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இனறு ராஜ்யசபா ஒத்தி வைக்கப்படும் முன் இது குறித்து மத்திய நலத்துறை அமைச்சர் சத்ருகன் சின்ஹா சபையில் தெரிவித்தவிவரம்:

இப்போதைய இந்திய மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் இளைஞர்கள். இனப் பெருக்க வயது வரம்பில் இருப்பவர்கள்.இதனால் தான் தொடர்ந்து மக்கள் தொகை பெருகி வருகிறது.

மேலும் நாட்டின் சில பகுதிகளில் கருத்தடை சாதனங்கள் உபயோகம் மிகக் குறைவாகவே உள்ளது.

குழந்தைகள் இறப்பு விகிதம் அதிக அளவில் இருப்பதால் கருத்தடை சாதனங்களை ஏற்க இந்த மக்கள் முன் வர மறுக்கின்றனர்.ஆண் குழந்தைக்கு முயற்சி செய்து கொண்டே இருப்பதும் இன்னொரு காரணம்.

1961-71ம் ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி 2.20 சதவீதமாக இருந்தது. 1971-81ம் ஆண்டில் இது 2.22 சதவீதமாகஉயர்ந்தது.

1991-2001ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 18 கோடி அதிகரித்தது. இந்தக் கால கட்டத்தில் மக்கள் தொகை வளர்ச்சிகுறையவும் ஆரம்பித்தது. தொடர்ந்து இது குறையும். என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+