பொடாவுக்கு எதிராக வழக்கு: மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
சென்னை:
பொடா சட்டத்தில் உள்ள சர்ச்சைக்குரிய விதிமுறைகளை நீக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இது தொடர்பாக விளக்கம் தரக் கோரி மத்தியஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
பொடா சட்டத்தில் உள்ள 18 பிரிவில் இருந்து 22வது பிரிவு வரை உள்ள விதிகள் மிகவும் சர்ச்சைக்குரியவை. இந்தப் பிரிவுகளைக்கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் இந்தச் சட்டத்தை ஏதேச்சதிகாரத்துடன் பயன்படுத்த முடியும். இது இந்திய அரசியல்சட்டத்துக்கு எதிரானது.
தனக்கு ஒத்து வராத அமைப்புகள், தனி மனிதர்கள் மீது அரசுகள் பொடா சட்டத்தைப் பயன்படுத்த இந்தப் பிரிவுகள் வழிவகுக்கின்றன. சமீபத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டது இதற்கு ஒரு உதாரணம்.
இந்திய அரசியல் சட்டத்துக்கு விரோதமான இந்த சட்டப் பிரிவுகளை நீக்க வேண்டும் என அந்த வழக்கறிஞர் தனது மனுவில்கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி முருகேசன் ஆகியோர்அடங்கிய டிவிசன் பெஞ்ச் இது தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இறுதிச் சடங்குகளை மேற்கொண்ட அஜித் குமாரின் சகோதரர்.. மோகினி மணி உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம்!












Click it and Unblock the Notifications