தமிழகத்தை வளமாக்கவே பிரிக்கும் யோசனை: ராமதாஸ் "பல்டி"
சென்னை:
தமிழகத்தை வளமாக்கி இந்தியாவை வலிமையான நாடாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் நம்மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தான் கூறியதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விளக்கம்அளித்துள்ளார்.
இதுகுறித்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நிர்வாக வசதிக்காகவும் பின் தங்கிய மாவட்டங்களின் மீது தனிக் கவனம் செலுத்துவதற்காகவும் இந்தியாவின் சிலபகுதிகளில் ஏற்கனவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
வளமான, வலிமையான இந்தியாவை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் தான் சமீபத்தில் வட இந்தியாவில்மூன்று மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
இதே நோக்கத்தின் அடிப்படையில் தான் தமிழகத்தையும் இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற யோசனையைநாங்கள் முன் வைத்தோம்.
ஆனால் நாட்டு நலனுக்கு எதிரானது, தமிழகத்தை பலவீனப்படுத்தி விடும் என்றெல்லாம் என்னுடைய யோசனைகுறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
என்னுடைய இந்த யோசனை தமிழகத்தை பலவீனப்படுத்தி விடும் என்று அஞ்சத் தேவையில்லை. இன்னும்சொல்லப் போனால் சிறிய மாநிலமாக இருந்தால் தான் பிரிவினைவாத சக்திகளை விரைவாக அடக்கி ஒடுக்கமுடியும்.
பின் தங்கிய நிலையில் உள்ள மாவட்டங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி அவற்றையும் வளர்ச்சியடையச் செய்துதமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றுவதற்காகத் தான் இந்த யோசனையை நான் தெரிவித்தேன்.
இது நடைமுறையில் சாத்தியமா என்பது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார்ராமதாஸ்.
சமீபத்தில் உத்திரமேரூரில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டில் பேசிய போது, வன்னியர் ஒருவரை முதல்வராக்கதமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியிருந்தார்.
அவருடைய இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியவுடன் தமிழகத்தை வளமாக்குவதற்காகத் தான் இந்தயோசனையைக் கூறியதாக அவர் "பல்டி" அடித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications