துணை ஜனாதிபதி தேர்தல்: ஷிண்டே மனு தாக்கல்
டெல்லி:
துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மூத்த காங்கிரஸ் தலைவர் சுசில் குமார்ஷிண்டே இன்று தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அடுத்த மாதம் 12ம் தேதி துணை ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
நாட்டின் முதல் குடிமகனாகிய ஜனாதிபதி பதவிக்கு பிரபல அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் அப்துல்கலாமை நிறுத்தி வெற்றி பெறச் செய்த கையோடு துணை ஜனாதிபதி பதவிக்கு ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்பைரோன் சிங் ஷெகாவத்தை வேட்பாளராக நிறுத்தியது தேசிய ஜனநாயகக் கூட்டணி.
தங்களிடம் கலந்து ஆலோசிக்காமல் தேசிய ஜனநாயகக் கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்தியதைத்தொடர்ந்து காங்கிரசும் தன்னுடைய வேட்பாளராக ஷிண்டேயை அறிவித்தது.
ஷெகாவத் கடந்த வாரம் மனு தாக்கல் செய்த நிலையில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த தலித் தலைவரான ஷிண்டேஇன்று தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி கட்சித் தலைவர்முலாயம் சிங் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சோம்நாத் சட்டர்ஜி மற்றும் முன்னாள் முதல்வரும் ஐக்கியஜனதா தளக் கட்சியின் தலைவருமான தேவ கெளடா ஆகியோர் ஷிண்டே சார்பாக வேட்பு மனுக்களைத் தாக்கல்செய்தனர்.
ஷிண்டேக்கும் ஷெகாவத்துக்கும் இடையேயான இந்தப் போட்டியை மிகவும் சாதாரணமாக எண்ணி விடக் கூடாதுஎன்று மனு தாக்கல் முடிந்த பின் சோனியா கூறினார்.
எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டு ஷிண்டேயைக் களத்தில் நிறுத்தியுள்ளோம் என்றுமுலாயம் கூறிய போது, "பா.ஜ.கவின் ஆட்டம் ஓய்ந்து விட்டது. அவ்வளவு தான்" என்று லல்லு நகைச்சுவையுடன்கூறினார்.
சிறு வயதில் சோலாப்பூரில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் பியூனாகத் தான் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்தற்போது 61 வயதாகும் ஷிண்டே.
பின்னர் படிப்படியாக முன்னேறி மகாராஷ்டிரா காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் 20 ஆண்டுகள் அமைச்சராகஆகும் அளவுக்கு உயர்ந்தார். மகாராஷ்டிரா நிதி அமைச்சராக 9 பட்ஜெட்டுகளைத் தொடர்ந்து சமர்ப்பித்து சாதனைபடைத்தார்.
பின்னர் 1990களில் ராஜ்ய சபா எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த 1999ல் நடந்தநாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று லோக் சபா எம்.பி. ஆனார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராகவும் பல ஆண்டுகள் இருந்துள்ளார் ஷிண்டே. தற்போதுகாங்கிரஸ் தேர்தல் கமிட்டியில் உறுப்பினராக உள்ளார்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications