எஸ்.எஸ்.எல்.சி. உடனடி மறு தேர்வு முடிவுகள் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த மார்ச் மாதம் நடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஒன்று, இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்குநடத்தப்பட்ட உடனடி மறுதேர்விற்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஓராண்டை வீணாக்குவதைத் தடுக்க உடனடியாகமறு தேர்வு நடத்தும் திட்டம்

தமிழக அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கல்வியமைச்சர் தம்பிதுரையின் யோசனையில் உருவான இந்தத் திட்டத்துக்கு

சுமாராகப் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களும் மாணவர்களும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இத் திட்டத்தின்படி கடந்த 10ம் தேதி முதல் உடனடி மறு தேர்வுகள் நடந்தன. இந்தத் தேர்வு முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டன. இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் பழனிவேலு கூறுகையில்,

இந்த உடனடி மறு தேர்வில் சுமார் 34,500 மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதன்மூலம் இவர்கள் இந்த ஆண்டே தங்களுடைய மேற்படிப்பைத் தொடர முடியும்.

கூடுதலாக ஒரு 4 மாணவர்களை 11ம் வகுப்பில் சேர்த்துக் கொள்வதில் எந்தப் பள்ளிக்கும் பிரச்சனை இருக்காதுஎன்று நம்புகிறேன்.

மேலும் இந்த ஆண்டு தமிழகத்தில் கூடுதலாக 125 பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனால் இந்த மறு தேர்வுமூலம் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஒரு ஆண்டை வீணாக்காமல் இந்த ஆண்டிலேயே 11ம் வகுப்பில் எளிதாகச்சேர்ந்து விட முடியும் என்றார் பழனிவேலு.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்ட பின்வரும் வெப்சைட்டுகள் மூலமாகவும் இந்த உடனடிமறு தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்:

www.chennaionline.com

www.tnagar.com

எஸ்.எஸ்.எல்.சி. தவிர மெட்ரிகுலேசன் மற்றும் ஆங்கிலோ இந்தியன் உடனடி மறு தேர்வு முடிவுகளும்வெளியிடப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+