வைகோ: மாநில உளவுப் பிரிவுக்கு ஆப்பு வைக்கும் ஐ.பி

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் சிறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை மத்திய அமைச்சர்கள் சந்தித்துப் பேசும்போது அதை டேப் செய்யவிடாமல் மத்திய உளவுப் பிரிவான இன்டலிஜென்ஸ் பீரோ (ஐ.பி.) தடுத்துவிடுகிறது.

இதனால் மாநில ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டி.(சி.பி.சி.ஐ.டி.) எனப்படும் மாநில உளவுப் பிரிவினருக்கும் மத்திய உளவுபிபிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர்களுக்கு ரகசிய பாதுகாப்பு தர ஐ.பி. அதிகாரிகள் உடன் வருகின்றனர். அவர்கள் மத்திய அமைச்சர்கள் இருக்கும்இடங்களில் எல்லாம் இருப்பார்கள்.

வைகோவின் அன்றாட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் பணி ஸ்பெஷல் பிராஞ்ச் சி.ஐ.டியிடம் தமிழக அரசு கொடுத்துள்ளது.இவர்கள் சிறைக் கண்காணிப்பாளர் உள்பட சிறை அதிகாரிகள் உதவியுடன் வைகோவை கண்காணிக்கின்றனர். அவர் தினமும்யாரை சந்திக்கிறார், என்ன படிக்கிறார், கட்சிக்காரர்களிடம் என்ன சொல்லி அனுப்புகிறார் போன்ற விவரங்களை இந்த சி.ஐ.டி.பிரிவினர் உடனடியாக காவல்துறை தலைமையகத்துக்கு அனுப்புகின்றனர். இந்தத் தகவல்கள் பின்னர் மேலிடத்துக்குப் போய்சேருகின்றன.

வைகோவுடனான இந்தச் சந்திப்புகள் டேப் செய்யப்படுகின்றன. இந்த உரையாடல்கள் உடனே சென்னைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. ரகசிய கேமராக்கள் மூலமும் இந்தச் சந்திப்புகள் கண்காணிக்கப்படுகின்றன.

ஆனால், மதிமுகவின் மத்திய அமைச்சர்களான செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் ஆகியோர் வைகோவை சந்திக்கும்போதுஅவர்களுடன் வரும் ஐ.பி. அதிகாரிகள் மாநில போலீசாரை தூரமாகவே தடுத்து நிறுத்தி விடுகின்றனர். இதனால் வைகோவுடன்இந்த அமைச்சர்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகளை ஒட்டு கேட்கவோ, ரகசியமாய் டேப் செய்யவோ முடியாமல் எஸ்.பி.சி.ஐ.டி.தடுமாறி வருகிறது.

எஸ்.பி.சி.ஐ.டியைவிட அதிக டெக்னிக்கள் தெரிந்த ஐ.பி. அதிகாரிகள், அமைச்சர்களின் வருகையையொட்டி சந்திப்பு நடக்கும்அறையைை பாதுகாப்பு சோதனையிட்டு ஒட்டு கேட்பு கருவிகளை அகற்றிவிடுகின்றனர்.

இதனால், மேலிடத்துக்கு தகவல் தர முடியாமல் எஸ்.பி.சி.ஐ.டி. நறநறத்து வருகிறது.

பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் வேலூர் சிறைக்கு வந்தபோது அவரை நெருங்கவே எந்த மாநில போலீசாரையும்ஐ.பி. அனுமதிக்கவில்லை. வைகோவும் பெர்னாண்டசும் என்னதான் பேசினார்கள் என்பது குறித்து எஸ்.பி.சி.ஐ.டிக்கு ஒன்றுமேதெரியவில்லை. அந்த அளவுக்கு அந்தச் சந்திப்பை சிறைக்குள்ளேயே ரகசிய சந்திப்பாக மாற்றிவிட்டது ஐ.பி.

இதனால் தங்களது பணியில் ஐ.பி. தலையிடுவதாக எஸ்.பி.சி.ஐ.டி. எரிச்சலடைந்துள்ளது. ஆனால், ஐ.பிக்கு அதிகாரம் அதிகம்.அதிகார வரம்புப்படி அவர்கள் சொல்வதைக் கேட்டு எஸ்.பி.சி.ஐ.டி. ஒதுங்கியாக வேண்டும்.

தன்னைக் கண்காணிக்கும் மாநில உளவுப் பிரிவை மத்திய அமைச்சர்களின் உதவியுடன் சமாளித்து வருகிறார் வைகோ.

இன்று ஜேட்லி வருகை:

இந் நிலையில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ.க. தேசியச் செயலாளருமான அருண் ஜேட்லி இன்று வேலூர் வருகிறார்.

அவர் சிறையில் வைகோவைச் சந்தித்துப் பேசுகிறார். தீவிர அதிமுக எதிர்ப்பாளரான இவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில்உள்ள கட்சிகளை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரான இவருடன் தான் பொடா சட்ட விவகாரம்தொடர்பாக மதிமுக கலந்து பேசி வருகிறது.

இந்த வழக்கை சமாளிக்க வைகோவுக்கு இவர் சில டிப்ஸ் தரக் கூடும் என்று தெரிகிறது. கருணாநிதி கைது செய்யப்பட்டபோதுஅதிமுக அரசைக் கலைக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஒரே பா.ஜ.க. தலைவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக பா.ஜ.கவின் பொறுப்பாளராகவும் இவர் நேற்று நியமிக்கப்பட்டார்.

வழக்கு தொடர மாட்டோம்: மதிமுக

இந் நிலையில் வைகோ கைதை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதில்லை என்ற முடிவுக்கு மதிமுகவந்துள்ளது. இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே வழக்கு தொடருவது குறித்து முடிவுசெய்யப்படும் என அக் கட்சியின் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் இன்றோ நாளையோ நாங்கள் வழக்குத் தொடர மாட்டோம். அவ்வாறு வரும்செய்திகள் தவறானவை. முதலில் ஜெயலலிதா அரசு குற்றப் பத்திரிக்கையை தாக்கல் செய்யட்டும். அதன் பின்னர் தான் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம் என்றார்.

வைகோவை சந்தித்தார் என்.டி. சண்முகம்:

இதற்கிடையே இன்று வேலூர் சிறைக்குச் சென்று வைகோவை சந்தித்தார் மத்திய உணவு பதப்படுத்தல் துறைஇணை அமைச்சர் என்.டி. சண்முகம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்துள்ள பாமகவைச் சேர்ந்த ஒருவர் வைகோவை சிறையில் சென்றுபார்ப்பது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் கூட இன்னும் வைகோவை சிறையில் சந்திக்கவில்லை என்பதும்குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+