அம்பேத்கர் vs
வேலூர்:
வேலூர் அருகே அனுமதியின்றி திடீரென்று அம்பேத்கர் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொருகோஷ்டியினர் அதற்கு எதிராக பஞ்சபாண்டவர் சிலைகளை வைத்ததையடுத்து அப்பகுதியில் பெரும் பதற்றம்ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் லக்கேரியில் நேற்று காலை எந்த அனுமதியும் பெறாமல் திடீரென ஒரு அம்பேத்கர் சிலைவைக்கப்பட்டது. யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக ஒரு கோஷ்டியினர் அந்த சிலையை வைத்திருந்தது.
இதையறிந்த மற்றொரு கோஷ்டியினர் அந்தச் சிலையை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினர்.ஆனால் அம்பேத்கர் சிலையை வைத்தவர்கள் அதற்கு மறுத்து விட்டனர்.
இதையடுத்து போட்டி கோஷ்டியினர் அந்த இடத்திற்கு பஞ்ச பாண்டவர்களின் சிலைகளைக் கொண்டு வந்துஅவற்றை அம்பேத்கர் சிலையருகே வைத்தனர்.
ஆனால், முதல் கோஷ்டியினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலிலும் இறங்கினர். இதைத்தொடர்ந்து அம்பேத்கர் சிலையை நீக்க வேண்டும் என்று கோரி போட்டி கோஷ்டியினரும் சாலை மறியலில்ஈடுபட்டனர்.
இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
விஷயம் கேள்விப்பட்டு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முயற்சித்தனர். இருதரப்பினரும் தங்களுடைய சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அவர்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர்.
ஆனால் இரு தரப்பினரும் இதற்கு மறுத்து விட்டு தங்கள் சாலை மறியலைத் தொடர்ந்தனர். இதனால் அங்கு மேலும்பதற்றம் அதிகரித்தது.
நேற்று இரவு 10 மணி வரை இப்பிரச்சனை நீடித்தது. அப்போது திடீரென்று அப்பகுதியில் மழை கொட்டஆரம்பித்தது. இதையடுத்து இரு தரப்பினரும் சாலை மறியலைக் கைவிட்டு ஓடி விட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த அம்பேத்கர் சிலையையும் பஞ்ச பாண்டவர்கள் சிலைகளையும் போலீசாரேகொட்டும் மழையில் அப்புறப்படுத்தினர். அம்பேத்கர் சிலை குடியாத்தத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.












Click it and Unblock the Notifications