விரைவில் மீண்டும் அக்னி ஏவுகணை சோதனை
டெல்லி:
அக்னி ஏவுகணையை இந்தியா மீண்டும் விண்ணில் செலுத்தி சோதனையிட உள்ளது. இந்தச் சோதனைக்குப் பின் இந்த ஏவுகணைஇந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுவிடும் என பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
ராஜ்யசபாவில் பேசிய அவர், 700 கி.மீ. பாயந்து சென்று தாக்கும் அக்னி-1 ஏவுகணையின் சோதனைகள் அனைத்தும்முடிந்துவிட்டன. இன்னும் ஒரே ஒரு சோதனைக்குப் பின் அந்த ஏவுகணைக் தொழில்நுட்பம் ராணுவத்தின் வசம் தரப்பட்டுவிடும்.தேவைப்படும்போது, தேவைப்படும் எண்ணிக்கையில் இந்த ஏவுகணைகளை ராணுவம் இனி தயாரித்துக் கொள்ளும்.
கடந்த ஜனவரியில் அக்னி-1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனையிடப்பட்டது. இப்போது 2,500 கி.மீ. தூரம் சென்று தாக்கும்அக்னி-2 தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
அதே போல விமானங்களைத் தாக்கும் திரிசூல், ஆகாஷ் ஏவுகணை தயாரிப்புப் பணிகள் 2003 டிசம்பரில் முடிவடையும்.டாங்கிகளை தாக்கும் நாக் ஏவுகணையை மேம்படுத்தும் பணி 2004 டிசம்பரில் முடிவடையும்.
ரஷ்யாவுடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் அதிவேக ஏவுகணையான பிரமோஸ் 2003ல் தயாரிக்கப்பட்டு அடுத்தஆண்டிலேயே ராணுவத்திடம் தரப்பட்டுவிடும்.
டி.ஆர்.டி.ஓவுக்குச் சொந்தமான ஒரு ஆய்வகத்தை முழுக்க முழுக்க ஏவுகணை ஆராய்ச்சிக்காக ஒதுக்கிவிட்டோம். வேறு அரசுஆராய்ச்சி நிலையங்களில் இருந்தும் ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் இந்த ஏவுகணைத் திட்டப் பணிகளில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications