நாகூர்: கிரேன் உடைந்து விழுந்து 3 பேர் உடல் நசுங்கி சாவு
நாகூர்:
நாகூர் அருகே கடற்கரையோரம் எண்ணெய் நிறுவனத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் அதன் மீது ஏறி நின்றுவேலை செய்து கொண்டிருந்த 3 தொழிலாளர்கள் உடல் நசுங்கி இறந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் அருகே கடற்கரையோரம் அமைந்துள்ள ஒரு எண்ணெய் நிறுவனத்தில்கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
இன்று காலை ஐந்து தொழிலாளர்கள் ஒரு பிரம்மாண்டமான தூணின் அடிப்பகுதியில் சில ரிப்பேர் வேலைகளைச்செய்வதற்காக கிரேன் மூலம் மேலே சென்றனர்.
உயரமான கிரேனின் நுனிப் பகுதியில் அவர்கள் ஐந்து பேரும் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது அவர்கள் அந்தத் தூணின் அடிப்பகுதிக்குச் செல்வதற்கு முன்பாகவே திடீரென்று கிரேனின் ஒரு பகுதிஉடைந்து கீழே விழுந்தது.
இதையடுத்து கிரேனின் நுனிப் பகுதியில் நின்று கொண்டிருந்த ஐந்து தொழிலாளர்களும் உடைந்து போனகிரேனுடன் மிக உயரத்தில் இருந்து கீழே விழுந்தனர்.
முதலில் அவர்கள் தரையில் விழ, பின்னால் தொடர்ந்து வந்த கிரேன் அவர்கள் ஐந்து பேரின் மேலும் விழுந்தது.இதில் மூன்று பேர் உடல் நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கிரேனை இயக்கிக் கொண்டிருந்த இரண்டுஆபரேட்டர்கள் பயந்துபோய் அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டனர்.
காயமடைந்த இரண்டு தொழிலாளர்களும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக மூன்று மேற்பார்வையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications