இந்திய கிரிக்கெட்டின் "நூற்றாண்டு வீரர்" கபில்
லண்டன்:
20ம் நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராக முன்னாள் கேப்டன் கபில் தேவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் விஸ்டன் என்ற அமைப்பின் சார்பாக நடந்த ஒரு விழாவில் கபிலுக்கு இந்த "நூற்றாண்டு வீரர்" கவுரவம்அளிக்கப்பட்டது.
131 டெஸ்ட் பந்தயங்களில் விளையாடியுள்ள கபில் மொத்தம் 434 விக்கெட்டுகளைச் சாய்த்து உலக சாதனைபுரிந்தார். அப்போது நியூசிலாந்து வீரர் ரிச்சர்ட் ஹாட்லியின் சாதனையையும் அவர் முறியடித்தார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் 5,248 ரன்களையும் கபில் குவித்தார்.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் கடந்த 1983ம் ஆண்டு கபில் தலைமையில் இங்கிலாந்து சென்ற இந்தியகிரிக்கெட் அணியினர் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் உலகக் கோப்பையை வென்று கோடிக்கணக்கானஇந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் திக்குமுக்காடச் செய்தனர்.
கபிலின் இந்த சாதனையை கவுரவிக்கும் பொருட்டே அவர் இந்த நூற்றாண்டின் சிறந்த இந்திய கிரிக்கெட் வீரராகத்தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஓய்வு பெற்ற இந்தியாவின் மற்றொரு முன்னாள் கேப்டன் சுனில் காவஸ்கர் மற்றும் தற்போதைய இந்தியஅணியின் நம்பிக்கை நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரின் பெயர்களும் இந்தப் பட்டத்திற்கானபட்டியலில் இடம் பெற்றிருந்தன.
ஆனால் உலகக் கோப்பையைக் கைப்பற்றியதில் முக்கியப் பங்கு வகித்த கபில் இந்தப் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் விவியன் ரிச்சர்ட்ஸ் அவருக்கு இந்த விருதை வழங்கினார்.
ஆனாலும் காவஸ்கரையும் டெண்டுல்கரையும் விஸ்டென் நிறுவனம் கவுரவிக்காமல் விட்டுவிடவில்லை.
1985ல் "பென்சன் அன்ட் ஹெட்ஜஸ்" கோப்பையை வென்ற காவஸ்கர் தலைமையிலான அணி தான் சிறந்த இந்தியகிரிக்கெட் அணியாக இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டது.
அதே போல் தேசிய அளவில் நடத்தப்பட்ட விஸ்டென் கணக்கெடுப்பில் இந்தியாவின் சிறந்த வீரராக டெண்டுல்கர்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications