இலங்கை நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அடிதடி
கொழும்பு:
இலங்கை நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்.பிக்களும் எதிர்க் கட்சி எம்.பிக்களுக்கும் அடிதடியில் இறங்கினர். ஒருவரை ஒருவர்சட்டையைப் பிடித்து இழுத்து, முகத்தில் குத்திக் கொண்டனர்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய வர்த்தக அமைச்சர் ரவி கருணாநாயகே, அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து பிரதமர் ரணில்விக்கிரமசிங்கேயைக் கொல்வதற்காக அதிபர் சந்திரிகா தனது கைப் பையில் வெடிகுண்டுடன் வந்ததாகக் கூறியிருந்தார்.
இந் நிலையில் இன்று நாடாளுமன்றம் கூடியவுடன் அதிபர் சந்திரிகாவின் எதிர்க் கட்சியைச் சேர்ந்த எம்.பிக்கள் எழுந்து, அமைச்சர் ரவிகருணநாயகே மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினர். அப்போது பேசிய சட்ட அமைச்சர் லோகும்பந்தரா, அமைச்சர் ரவி அப்படிப்பேசவே இல்லை என்றார்.
இதையடுத்து எதிர்க் கட்சியினருக்கும் ஆளும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. எதிர்க் கட்சி எம்.பிக்கள் பலரும்அமைச்சரை நோக்கி கோபத்துடன் முன்னேறினர். அவர்களை ஆளும் கட்சி எம்.பிக்கள் தடுத்தபோது அவர்களுக்கு முகத்தில் குத்துவிட்டனர். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்கேயின் ஆளும் கட்சியினர் திருப்பி அடித்தனர்.
இரு தரப்பினரும் முகத்தில் குத்திக் கொண்டனர். அடிதடி முற்றியதால் அவையை சபாநாயகர் ஒத்தி வைத்தார். காவலர்களைக் கொண்டுஅடிதடியில் இறங்கிய எம்.பிக்களை சபாநாயகர் பிரித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications
