டி.ஐ.ஜியிடம் ரூ. 7 கோடிக்கு சொத்து, வைரம், நகைகள்
சென்னை:
ஊர்க் காவல்படையின் டி.ஐ.ஜி. ராமநாதனின் வீட்டில் கடந்த இரு நாட்களாக நடந்த ரெய்டில் அவருக்கு ரூ. 7 கோடி அளவுக்கு சொத்துஇருப்பது தெரியவந்துள்ளது.
டி.ஐ.ஜி. என்ற முறையில் அவரது மாத வருமானம் ரூ. 20,000க் கூட தாண்டாது என்பது குறிப்பிடத்தக்கது.
கிரானைட்களால் இழைக்கப்பட்டுள்ள இவரது கடற்கரை பங்களாவின் மதிப்பு மட்டும் ரூ. 3 கோடி என்று தெரியவந்துள்ளது. தவிரவும்லேட்டஸ்ட் ரக கார்கள் பலவும் சொந்தமாக வைத்துள்ளார்.
சேலம் மாவட்ட கமிஷ்னராக இருந்தபோது தான் இவர் பெருமளவில் கொள்ளையடித்தார் என்று தெரிகிறது. அன்றைய திமுக அமைச்சர்வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவோடு இவர் சுருட்டிய பணம் இது என்று கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுகாள இவரது சென்னை நீலாங்கரை பங்களா, அண்ணா நகர் வீடு, திருவண்ணாமலை வீடு, இவரது மனைவிமனோன்மணி, மகள் சாந்தி ஆகியோரின் பேங்க் லாக்கர்களில் சோதனை நடந்தது. இதில் இவரிடம் ரூ. 7 கோடிக்கு சொத்து இருப்பதுதெரியவந்தது.
வீடுகளில் குளோஸ் சர்க்யூட் கேமரா எல்லாம் அமைத்துள்ளார் இவர். வீட்டின் எல்லா அறைகளும் ஏ.சி. செய்யப்பட்டுள்ளன. லாக்கர்களில்300 பவுன் நகையும், வைரங்களும் இருந்தன.
மும்பையிலும் இவருக்கு சொத்து உள்ளது தெரியவந்தது. செம்பரம்பாக்கம், பரமகுடி, கல்பாக்கம் ஆகிய இடங்களில் நிலங்கள், வீடுகள்உள்ளன.
இவரது மகள் ஒரு டேட்டா என்ட்ரி தொடர்பாக கம்யூட்டர் நிறுவனம் நடத்தி ரூ. 1 கோடி வரை மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications