மோதுமா? மோதாதா?: பூமியை நோக்கி வரும் விண்கல்
கலிபோர்னியா:
2019ம் ஆண்டில் பூமியுடன் ஒரு மிகப் பெரிய விண் கல் மோதுவதற்கான வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.
2 கி.மீ. அகலம் கொண்ட இந்த விண் கல்லுக்கு 2002 என்.டி.7 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தக் கல் சமீபத்தில் தான்கண்டுபிடிக்கப்பட்டது. இது 2019ம் ஆண்டில் பிப்ரவரி 1ம் தேதி பூமியின் பாதையில் எதிர் திசையில் வந்து மோத வாய்ப்புள்ளதாகத்தெரியவந்துள்ளது.
மோதுவதற்கு 2,50,00ல் ஒரு வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த விண் கல்லை நாசா விஞ்ஞானிகள்கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர். இதன் பாதை மாறிவிட நிறைய வாய்ப்பபுகள் உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.
பூமிக்கு அருகே உள்ள விண் கற்கள் குறித்து ஆராயும் லிங்கன் மைய விஞ்ஞானிகள் நியூமெக்சிகோவில் உள்ள புவியியல் தொலைக்காட்சிமூலம் வானை ஆராய்நதபோது இந்த விண் கல் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி அடையாளம் காணப்பட்ட இந்த விண் கல்இப்போது பூமியில் இருந்து 135 மில்லியன் கி.மீ. தொலைவில் உள்ளது.
பூமியை மாதிரியே இதுவும் சூரியனை சுற்றி வருகிறது.
2019ம் ஆண்டில் இந்த விண் கல் மோதாமல் போய்விட்டாலும் கூட 2044, 2053, 2060, 2078ம் ஆண்டுகளில் இந்தக் கல் பூமியின்பாதையில் கிராஸ் செய்யவும் மோதவும் வாய்ப்புகள் உள்ளதும் தெரியவந்துள்ளது.
சூரியனை 837 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வரும் இந்த விண் கல் அடுத்த ஒரு வருடத்துக்கு தொடர்ந்து பூமியில் இருந்துதொலைநோக்கிகள் மூலம் பார்க்கும் வகையில் இருக்கும். பின்னர் சூரியனின் பின்னால் மறைந்துவிடும்.
இந்த ஒரு வருட கால கட்டத்தில் இதன் பாதை எப்படி அமைகிறது என்பதை வைத்துத் தான் இது பூமியில் மீது 2019 மோதுமா இல்லையாஎன்பது குறித்து தெரியவரும் என நாசா தெரிவித்துள்ளது.
பல விண் கற்கள் பூமியின் மிக அருகில் சுற்றிக் கொண்டிருந்தாலும் இந்த விண் கல்லின் மிகப் பெரிய சைஸ் தான் விஞ்ஞானிகளைகவலைப்படுத்தியுள்ளது.
இது பூமியின் மீது ஒருவேளை மோதினால் மிகப் பெரிய பாதிப்புகள் ஏற்படலாம் எனவும் நாசா கூறியுள்ளது. மணிக்கு 96,000 கி.மீ.வேகத்தில் பூமியின் மீது மோதும் இந்த விண்கல் 1.2 மில்லியன் மெகா டன் எடை கொண்ட டி.என்.டி. வெடிமருந்து வெடித்தால் ஏற்படும்சேதத்தை உண்டாக்கும்.
கடந்த மாதம் தான் கால்பந்து மைதானத்தின் அளவு கொண்ட ஒரு விண் கல் பூமியை மிக அருகில் எட்டிப் பார்த்துவிட்டுச் சென்றது. பூமியில்இருந்து 1,20,575 கி.மீ. தொலைவு வரை வந்துவிட்டுப் போனது இந்த விண் கல். இவ்வளவு பெரிய விண் கல் இவ்வளவு நெருக்கமாய்பூமியருகே வந்துவிட்டுப் போனது இதுவே முதல்முறையாகும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications