கேரளாவில் அச்சாகி தமிழகத்தில் தாராளமாக புழங்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் மாவட்டத்தில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் புழக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டுநாட்களில் மட்டும் ரூ.2.5 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்துமே கேரளாவில் அச்சடிக்கப்பட்டு தமிழகத்தில் புழங்கவிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
சமீப காலமாகவே தமிழகத்தில் கள்ள நோட்டுக்கள் புழக்கம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இது தொடர்பாகஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம்மாதத் துவக்கத்தில் பொள்ளாச்சி அருகே கப்பலாங்கரை என்ற ஊரில் நடத்திய வாகனசோதனையின் போது ரூ.5,000 மதிப்புள்ள 100 ரூபாய் கள்ள நோட்டுக்கள் வைத்திருந்த இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் வந்த பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த இருவரும் தந்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஒரு வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.75,000மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த ஒரு பெண் உள்பட நான்குபேரையும் போலீசார் கைது செய்தனர்.
இது தொடர்பாக மேலும் பலரைப் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் கள்ள ரூபாய் நோட்டுக்கள் வைத்திருந்ததாக பொள்ளாச்சியில் ஒருவரையும் கோயம்புத்தூரில்ஒருவரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ரூ.15,000 மதிப்புள்ள 50 ரூபாய் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.
முன்னதாக நேற்றும் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.2.35 லட்சம் மதிப்புள்ள 50 ரூபாய் மற்றும் 100 ரூபாய்கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டு, இது தொடர்பாக ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்தக் கள்ள ரூபாய் நோட்டுக்கள் அனைத்துமே கேரளாவில் அச்சடிக்கப்பட்ட விஷயமும் போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications