திண்டுக்கல்: விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் கிணற்றில் தூர் வாருவதற்காக இறங்கிய 4 தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.
இந்நகரில் உள்ள மேட்டுப்பட்டி 3வது குறுக்குத் தெருவில் அந்தோணி என்பவர் சோடா கம்பெனி நடத்திவருகிறார்.
அந்தோணியின் வீட்டில் 70 அடி ஆழமுள்ள ஒரு கிணறு நீண்ட காலமாக மூடப்பட்டுக் கிடந்தது. அந்தக் கிணற்றைத்தூர் வார முடிவு செய்த அவர் இதற்காக ஐந்து தொழிலாளர்களை அழைத்திருந்தார்.
நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று தொழிலாளர்கள் மட்டும் கிணற்றுக்குள் இறங்கி தூர் வாரும் பணியில்ஈடுபட்டனர்.
கிணற்றுக்குள் சுமார் 55 அடி ஆழத்தில் ஒரு சிறு மேடை இருந்தது. அதில் ஒரு மோட்டாரை வைத்துக் கொண்டுஅந்தத் தொழிலாளர்கள் தூர் வார ஆரம்பித்தனர்.
டீசல் மற்றும் மண்ணெண்ணை ஆகியவற்றைக் கொண்டு அந்த மோட்டார் இயக்கப்பட்டது. இதனால் அதிலிருந்துவெளியேறிய கார்பன் மோனாக்சைடு என்ற வாயு கிணற்றின் மேல் பகுதிக்குச் செல்லாமல் கீழ்ப் பகுதிக்குச்சென்றது.
இந்தப் புகை கலந்த வாயு தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்ததால் தூர் வாரிக் கொண்டிருந்த மூன்றுதொழிலாளர்களும் மூச்சுத் திணறி மயக்கமடைந்தனர்.
இதையடுத்து மற்ற இரண்டு தொழிலாளர்களும் கிணற்றுக்குள் இறங்கி மோட்டாரை நிறுத்தி விட்டு மயக்கமடைந்தமூன்று தொழிலாளர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால் அவர்களும் மூச்சுத் திணறி உள்ளேயே மயங்கிவிழுந்தனர்.
இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்ததீயணைப்புத்துறை வீரர்கள் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தீயணைப்பு வீரரான கமலக்கண்ணன் என்பவருக்கும் மயக்கம் ஏற்பட்டது. அவர் உடனடியாக ஒருதனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அதன் பின்னர் சுமார் 2 மணி நேரப் போராட்டத்தைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஐந்து தொழிலாளர்களும்மீட்கப்பட்டனர். ஆனால் மறவப்பட்டியைச் சேர்ந்த வேளாங்கண்ணி என்ற குண்டுமுத்து (45) என்ற தொழிலாளிகிணற்றுக்குள்ளேயே இறந்து விட்டார்.
இதற்குள் திண்டுக்கல் அரசு மருத்துமனையை செல் போன் மூலம் தொடர்பு கொண்ட தீயணைப்புத்துறைஅதிகாரிகள், உடனடியாக ஒரு மருத்துவக் குழுவை அனுப்புமாறு கேட்டனர்.
ஆனால் மருத்துவமனையின் மூத்த டாக்டர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஒருகூட்டத்திற்குச் சென்றிருப்பதால் அவர் அனுமதியில்லாமல் மருத்துவக் குழுவை அனுப்ப முடியாது என்றுமருத்துவமனையில் உள்ளவர்கள் கூறி விட்டனர்.
இதையடுத்து மீட்கப்பட்ட மற்ற நான்கு தொழிலாளர்களும் அவசர அவசரமாக அரசு மருத்துவமனைக்கே கொண்டுசெல்லப்பட்டனர்.
ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த செபஸ்தியார் (30), புதுகாப்பிளியப்பட்டியைச்சேர்ந்த தங்கராஜ் (45), சிறுநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செபஸ்தியான் (45) ஆகிய மூன்று தொழிலாளர்களும்உயிரிழந்தனர்.
புதுகாப்பிளியப்பட்டியைச் சேர்ந்த மற்றொரு தொழிலாளியான கந்தசாமி (45) மட்டும் கவலைக்கிடமான நிலையில்தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மனிதாபிமான அடிப்படையில் வந்து முதலுதவி அளித்திருந்தால்மூன்று தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications