புலிகளை ஆதரித்தால் நடவடிக்கை தொடரும்: ஜெயலலிதா உறுதி
சென்னை:
கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை தொடக்க விழா நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளைஆதரித்துப் பேசியவர்கள் குறித்து விவரங்களை சேகரித்து வருகிறோம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்றுகூறினார்.
அனுமதியின்றிக் கட்டப்படும் கட்டடங்களுக்கான வரைமுறைகளை நிர்ணயிப்பது கூறித்து இன்று அவசரமாகக்கூடிய தமிழக அமைச்சரவையின் கூட்டத்திற்குப் பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா பேசுகையில்,
இந்தக் கட்டட விவகாரம் குறித்து ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளநிலையில் அமைச்சரவையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் குறித்து இப்போதைக்குக் கூற இயலாது.
கடந்த வாரம் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவை மாநாட்டில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்,விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் ஆகியோர் புலிகளை ஆதரித்துப் பேசியதாகத் தெரிகிறது.
அவர்கள் பேசிய பேச்சுக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட வருகின்றன. அதன்படி அவர்கள் மீதுநடவடிக்கை எடுப்பது குறித்து பின்னர் அறிவிப்போம்.
இதே போல் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று தொடர்ந்து கூறி வரும் பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் மீதும் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான்ஏற்கனவே கூறியுள்ளேன் என்றார் ஜெயலலிதா.
மதிமுகவைத் தடை செய்வது குறித்து அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஒரு நிருபர் கேட்ட போது, இதைப்பற்றி எல்லாம் ஒவ்வொரு நாளும் பத்திரிக்கைகளுக்கு நாங்கள் கூறிக் கொண்டிருக்க முடியாது. வேறு ஏதாவதுமுக்கியமான கேள்வி இருந்தால் கேளுங்கள் என்று பதில் கூறினார் ஜெயலலிதா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications