ஜனாதிபதியாக பதவியேற்றார் கலாம்
டெல்லி:
இந்தியாவின் 12வது ஜனாதிபதியாக பிரபல அணு விஞ்ஞானி "பாரத ரத்னா" டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்இன்று காலை பதவியேற்றார்.
இன்று காலை 9.20 மணிக்கு ஜனாதிபதியின் மாளிகையிலிருந்து டாக்டர் கலாமும், முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனும் நாடாளுமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.
குதிரைப் படைகள் சூழ டாக்டர் கலாமும் நாராயணனும் நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் காலை 9.45மணிக்கு வந்து இறங்கினர். அவர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.என். கிர்பால் மற்றும் துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த் ஆகியோர் வரவேற்று மண்டபத்திற்குள் அழைத்துச் சென்றனர்.
நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் காலை 9.55 மணிக்கு டாக்டர் கலாமுக்கு நீதிபதி பி.என். கிர்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து இதுவரை டாக்டர் கலாம் அமர்ந்திருந்த ஆசனத்தில் நாராயணன் மாறி அமர்ந்து கொண்டார்.பதவியேற்ற பின் அதுவரை நாராயணன் அமர்ந்திருந்த ஜனாதிபதி ஆசனத்தில் டாக்டர் கலாம் அமர்ந்து கொண்டார்
71 வயதான டாக்டர் கலாம் ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தபீரங்கிகள் 21 முறை குண்டுகளை முழங்கின.
டாக்டர் கலாமின் பதவியேற்பு விழாவில் பிரதமர் வாஜ்பாய், துணைப் பிரதமர் அத்வானி, முன்னாள் ஜனாதிபதிவெங்கடராமன், முன்னாள் பிரதமர்கள் ஐ.கே. குஜ்ரால், தேவ கவுடா, அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முன்னாள் முதல்வர் லல்லுபிரசாத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ராமேஸ்வரத்திலிருந்து வந்திருந்த டாக்டர் கலாமின் அண்ணன் முத்து மீரான் மரைக்காயர், உறவினர்கள்மற்றும் நண்பர்கள், 100 பள்ளிக் குழந்தைகள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் மற்றும் பல வெளிநாட்டுத்தூதர்கள் ஆகியோரும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற உடனேயே நாட்டு மக்களுக்கு தன்னுடைய முதல் உரையை ஆற்றினார் டாக்டர் கலாம். அதன் பின்னர்இந்த ஆங்கில உரையின் ஹிந்தி மொழியாக்கத்தை கிருஷ்ணகாந்த் வாசித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications