மயக்க மாம்பழ ஜூஸ் கொடுத்து ரயில் பயணிகளிடம் ரூ.30 ஆயிரம் கொள்ளை
திருப்பத்தூர்:
ஹவுரா-திருவனந்தபுரம் ரயிலில் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த மாம்பழ ஜூஸையும் பிஸ்கட்டையும்கொடுத்து ரூ.30 ஆயிரத்தை 3 பேர் கொள்ளையடித்துச் சென்றனர்.
ஹவுரா-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு ஜோலார்பேட்டை வந்த சேர்ந்தது.
அப்போது அந்த ரயிலின் ஒரு பெட்டியில் மூன்று பயணிகள் மயங்கிய நிலையில் கிடந்தது தெரிய வந்தது.
உடனடியாக அவர்கள் மூவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மூன்று பேரும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றுதெரிய வந்தது. மயக்கம் தெளிந்த பின்னர் அவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ரயில் வந்து கொண்டிருந்த போது எங்களுடன் பயணம் செய்த வேறு மூன்றுபேர் எங்களுக்கு மாம்பழ ஜூஸும் பிஸ்கட்டும் கொடுத்தனர்.
அவற்றைச் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே நாங்கள் ரயிலிலேயே மயங்கி விழுந்து விட்டோம். அதன் பிறகு என்னநடந்தது என்று தெரியவில்லை.
ஆனால் எங்கள் சூட்கேசில் இருந்த ரூ.30 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது இப்போது தான் எங்களுக்குத்தெரிய வந்துள்ளது.
மயக்க மருந்து கலந்த மாம்பழ ஜூஸ் மற்றும் பிஸ்கட்டைக் கொடுத்த அந்த மூன்று பேரும் தான் நாங்கள் மயங்கிவிழுந்த பிறகு அந்தப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று அவர்கள் கூறினார்கள்.
ஜோலார்பேட்டை போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications