கலாம் மாறவில்லை...

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

அதிகாரம், பதவி எல்லாம் கலாமை கொஞ்சம் கூட மாற்றிவிடவில்லை. அவரது வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் பாதுகாவலர்களேதடுமாறும் நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்றத்தில் இருந்து லிமோசின் கார் மூலம் கே.ஆர். நாராயணனுடன் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்து வரப்பட்ட அவர் காரில்இருந்து இறங்கி விடுவிடுவென உள்ளே போனார். நாராயணன் தனக்கு பின்னால் வராததை உணர்ந்த அவர் திரும்பி வந்து பின்னர்மெதுவாக அவருடன் நடந்து போனார்.

பின்னர் பாரம்பரிய முறைப்படி குதிரைபூட்டிய சாரட் வண்டியில் ஜனாதிபதி மாளிகை வளாகத்துக்குள் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.வழக்கமாக ஜனாதிபதிகள் பாதுகாவலர்கள் உதவியுடன் அதன் மேல் ஏற முடியும். ஆனால், டக் என தாவி வண்டியில் அமர்ந்தார் கலாம்.

அவர் சாரட்டில் செல்வதைப் படம் எடுக்க பத்திரிக்கை புகைப்பட கலைஞர்கள் முண்டியடித்தனர். அவர்களை நோக்கி கையை அசைத்தார்கலாம். சார் ஒன்ஸ்மோர் என அவர்கள் குரல் எழுப்ப அவர்கள் படம் எடுப்பதற்கு வசதியாக பலமுறை கையை அசைத்தார்.

தனது ஸ்பிரிங் முடியை வழக்கமாக ஸ்டைலில் வாரியபடி வந்தார். சாரட்டில் இருந்து இறங்கி மிக வேகமாக நடந்து ராணுவத்தினரின்மரியாதையை அவர் ஏற்றார். அவரது நடைக்கு இணையாக பாதுகாவலர்கள் ஓட வேண்டி இருந்தது.

ஜனாதிபதி மாளிகைக்குள் அவரை நாராயணன் அழைத்துக் கொண்டு நுழைந்தபோது, தூரத்தில் நின்றிருந்த தனது விஞ்ஞானநண்பர்களையும் ராமேஸ்வரத்தில் இருந்து வந்திருந்த நண்பர்கள், உறவினர்களைப் பார்த்துவிட்ட கலாம் எல்லாவற்றையும் விட்டுவிட்டுநேராக அவர்களை நோக்கி நடந்தார்.

அங்கிருந்த இரு கிருஸ்தவ பாதிரியார்கள் கலாமுக்கு ஆசிர்வாதம் தந்தனர். நண்பர்கள், உறவினர்களுடன் கைகுலுக்கிய அவர் வேகமாகநடந்து போய் மீண்டும் நாராயணனுடன் போய் சேர்ந்து கொண்டார். வழக்கமான கட்டுப்பாடுகள், மிடுக்குகளை எல்லாம் தூக்கி வீசிவிட்டுமிக சாதாரண மனிதராக நடந்து கொண்டார்.

பின்னர் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனையும் அவரது மனைவி உஷாவையும் அவர்களின் புதிய வீட்டில் போய் சேர்த்துவிட்டுவந்தார் கலாம். அவர்களது புதிய வீட்டில் 15 நிமிடங்கள் அமர்ந்திருந்த கலாம் டீ சாப்பிவிட்டுக் கிளம்பினார்.

கலாமின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 100 பள்ளி மாணவ- மாணவிகளில் ஒரு சிறுமி யார் தெரியுமா? பிரதமர் வாஜ்பாயின்பேத்தி. (வாஜ்பாயின் வளர்ப்பு மகளின் மகள்).

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+