தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க ராமதாஸ் கோரிக்கை
மதுரை:
தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக முதல்வர் ஜெயலலிதா அறிவிக்க வேண்டும் என்று பாமகநிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று கூறினார்.
மதுரையில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. பருவ மழையும் இந்த ஆண்டு பொய்த்துவிட்டது. இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் பஞ்சம் தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது.
எனவே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக ஜெயலலிதாஅறிவிக்க வேண்டும்.
அத்துடன் நின்று விடாமல் இதைக் காரணம் காட்டி வறட்சி நிவாரணத் தொகையாக குறைந்தது ரூ.600கோடியையும் 10 லட்சம் டன் அரிசியையும் அவர் மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டும்.
இதற்காக ஜெயலலிதா டெல்லிக்குப் போய் பேச வேண்டும். இங்கிருந்து அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருந்தால் போதாது.
இவ்விஷயத்தில் கர்நாடக, ஆந்திர முதல்வர்கள் தங்கள் மாநிலங்களுக்காகப் போட்டி போட்டுக் கொண்டு மத்தியஅரசிடமிருந்து நிவாரணங்களைப் பெற்று வருகின்றனர். மத்தியப் பிரதேச முதல்வர் கூட திறமையாகச் செயல்பட்டுதன் மாநிலத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக நிதியுதவியைப் பெற்றுள்ளார்.
அதே போல் தமிழக அரசும் மத்திய அரசிடமிருந்து நிதியுதவிகளைப் பெறப் போராட வேண்டும்.
மேலும் வறட்சி காரணமாக வெளி மாநிலங்களுக்கு மக்கள் சென்று கஷ்டப்படுவதைத் தவிர்க்க வீட்டில் ஒருவருக்குவேலை வாய்ப்பு வழங்கவும் தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதையெல்லாம் விட்டு விட்டு ரூ.6 கோடி செலவு செய்து அரசு விழாக்களை நடத்திக் கொண்டு வீண் செலவு செய்துவருகிறார் ஜெயலலிதா. அதற்குத் தகுந்த நேரமல்ல இது என்றார் ராமதாஸ்.
"மக்களை திசை திருப்பும் ஜெயலலிதா":
இதற்கிடையே தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற தன்னுடைய கோரிக்கையைத் தவறாகத் திரித்துக்கூறி மக்களின் கவனத்தை ஜெயலலிதா திசை திருப்பிக் கொண்டிருப்பதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டினார்.
சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காகத் தான் அப்படி ஒரு யோசனையையே நான் தெரிவித்தேன் என்றுவிளக்கமளித்த ராமதாஸ், மாநிலங்கள் சிறிதாக இருந்தால் நன்றாக நிர்வாகம் நடத்த முடியும் என்றும் பஞ்சாப்,ஹரியானா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களே இதற்கு உதாரணம் என்றும் கூறினார்.
இந்நிலையில் ஜனாதிபதி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள மாநில முதல்வர்களுக்கு மத்திய அரசு அழைப்புவிடுக்க வேண்டும் என்ற திமுக தலைவர் கருணாநிதியின் கருத்தை ஆதரிப்பதாகவும் ராமதாஸ் கூறினார்.
இது தொடர்பாக கருணாநிதி நேற்று கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றும்ராமதாஸ் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications