வைகோ ரேடியோ வைத்து கொள்ளலாம்: உயர் நீதிமன்றம் அனுமதி
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ரேடியோ வைத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
சிறையில் அடைக்கப்பட்டது முதல் அவர் தனக்கு ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதி கோரி வந்தார். இது தொடர்பாக சிறைஅதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துப் பார்த்தார், சிறைத் துறை டி.ஜி.பியிடம் கடிதம் கொடுத்துப் பார்த்தார்.
ஆனால், சிறை விதிகளைக் காட்டி இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது என அதிகாரிகள் கூறி வந்தனர்.
இதையடுத்து ரேடியோ வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு உயர் நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல் செய்தார்.
அதில், ஒரு கட்சியின் பொதுச் செயலாளராகவும் எம்.பியாகவும் உள்ள எனக்கு நாட்டு நடப்புகளை அறிந்து கொள்ள உரிமை உண்டு.அதற்காகத் தான் ரேடியோ கேட்கிறேன். ரேடியோ தடை செய்யப்பட்ட சாதனம் அல்ல. எனவே ரேடியோ வைத்துக் கொள்ள எனக்குஅனுமதி தர வேண்டும் என்று வைகோ கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை இன்று நீதிபதி கனகராஜ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ரேடியோ வைத்துக்கொள்ள வைகோவுக்கு அனுமதி தர வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications