வன்னி பகுதிக்கு வரலாம்: ரணிலுக்கு புலிகள் அழைப்பு
யாழ்பாணம்:
வன்னி பகுதிக்கு வந்து பிரபாகரனுடன் நேரில் பேச்சு நடத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே முன் வந்தால் அவரை நிச்சயம் வரவேற்போம்என விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா சென்ற இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அங்கு நிருபர்களிடம் பேசுகையில், வன்னி பகுதிக்குச் சென்று புலிகளின்தலைவர் பிரபாகரனை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தக் கூட தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.
அவரது பேச்சுக்கு புலிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தாய்லாந்து பேச்சுவார்த்தை துவங்குவது இழுத்தடிப்புக்கு உள்ளாகியுள்ளநிலையில் ரணில் இந்த அறிவிப்பு மிகுந்த நம்பிக்கைக்கு உரியதாக உள்ளதாக புலிகள் நினைக்கின்றனர்.
இந் நிலையில் புலிகளின் இதழான சுடர் ஒளியில் வெளியாகியுள்ள செய்தியில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே வன்னி பகுதிக்கு வந்தால்அவரை வரவேற்போம். இது தொடர்பாக ரணிலிடம் இருந்து அதிகாரப்பூர்வமான கோரிக்கை வந்தால் அதை சாதகமான வகையில்பரிசீலிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சு எப்போது?
இதற்கிடையே தாய்லாந்து பேச்சுவார்த்தைகளுக்கு வழி வகுப்பது தொடர்பாக புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம்செப்டம்பரில் வன்னி பகுதிக்கு வருகிறார். அதன் பின்னர் தான் அமைதிப் பேச்சு நடத்தப்படும் என புலிகள் கூறியுள்ளனர்.
கடந்த மார்ச் மாதத்தில் கடலில் தரையிறங்கும் விமானத்தில் கிளிநொச்சிக்கு வந்தார் பாலசிங்கம். அதே விமானத்தில் அவர் லண்டன்திரும்பினார். ஆனால், இம்முறை அவர் வேறு வகையில் வன்னிக்கு வந்து சேருவார் என்று தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன் இலங்கை அமைச்சர் மோரகொடா லண்டனில் பாலசிங்கத்தைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
பாலசிங்கம் வரும் வரை பேச்சு தொடங்காது என்று கூறப்பட்டுள்ளதால் செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை தாய்லாந்து பேச்சுவார்த்தைதொடங்க வாய்பில்லை என்று கருதப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications