சுந்தரம் என்றொரு அரசியல் அசிங்கம்
ராசிபுரம்:
ராசிபுரம் அருகே நெசவாளர்கள் பட்டினியால் மக்களிடம் கஞ்சி வாங்கிக் குடிப்பதை மழைக்காக நடந்த பிரார்த்தனைஎன்று மாற்ற முயன்றார் ராசிபுரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏவான சுந்தரம். இதையடுத்து பசியாலும்பட்டினியாலும் வாடி வரும் நெசவாளர்கள் அவரை சிறை பிடித்தனர்.
தமிழகம் முழுவதும் வறுமை, பசிக் கொடுமைக்கு உள்ளாகியுள்ள நெசவாளர்களுக்காக பொதுமக்களே ஆங்காங்கு"கஞ்சித் தொட்டி" வைத்துள்ளனர்.
ராசிபுரம் அருகே உள்ள அத்தனூரில் உள்ள நெசவாளர்களும் இந்தக் கொடுமையிலிருந்து தப்பவில்லை. பட்டினிச்சாவு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக "கஞ்சித் தொட்டி"யைத் திறக்க இந்த ஊர்ப் பெரியவர்கள் முடிவுசெய்தனர்.
அதன் படி வீடு வீடாகச் சென்று அரிசி, சோளம், காய்கறிகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டு வந்து, ஊருக்குப்பொதுவான ஒரு இடத்தில் கஞ்சி காய்ச்சப்பட்டது.
கடந்த சனிக்கிழமை அத்தனூரில் இந்தக் "கஞ்சித் தொட்டி" திறக்கப்பட்டது. ஏழை நெசவாளர்கள் இங்கு வந்துகஞ்சி வாங்கிச் சென்றனர். அரசு கைவிரித்துவிட்டதால் இது தான் அவர்களுக்கு உணவுக்கான ஒரே வழி.
இங்கு மக்கள் கஞ்சி வாங்கிக் குடித்துக் கொண்டிருந்தபோது அதிமுகவினர் மற்றும் தனது அடிதடி ஆட்கள்புடைசூழ அங்கு ஆர்பாட்டாமாய் காரில் வந்து இறங்கினார் ராசிபுரம் எம்.எல்.ஏ. சுந்தரம்.
மக்கள் கஞ்சி வாங்கிக் குடித்து பசியாறுவதால் தனது தலைவியின் ஆட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிட்டதாகக்கருதிய அவர் தனக்கு நெருக்கமான பத்திரிக்கை நிருபர்கள், வீடியோகிராபர் மற்றும் சில அதிமுகபிரமுகர்களையும் அழைத்துக் கொண்டு வந்தார்.
அத்தனூர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சென்று அங்கு தேங்கிக் கிடக்கும் கைத்தறி சேலை மற்றும்வேஷ்டிகளின் இருப்பு குறித்து விசாரித்தார்.
பின்னர் அங்கிருந்த சில நெசவாளர்களை அழைத்து அவர்களுக்கு நூல் கொடுப்பது போலவும் நெய்ததுணிகளுக்கு கூலி கொடுப்பது போலவும் போட்டோ எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து "மழை வேண்டி சாமிக்குப் பூஜை செய்வதற்காகத் தான் கஞ்சி காய்ச்சினோம்" என்று அங்கிருந்தநெசவாளர்கள் வீடியோ கேமரா முன் கூற வேண்டும் என்றும் சுந்தரம் வற்புறுத்தினார். ஆனால் குடும்பத்துடன்பசியால் வாடி வரும் நெசவாளர்கள் அவ்வாறு பொய் சொல்ல மறுத்து விட்டனர்.
இதற்கிடையே நெசவாளர்களை சுந்தரம் வற்புறுத்திக் கொண்டிருக்கும் செய்தி அப்பகுதி முழுவதும் பரவியது.இதைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான நெசவாளர்களும் பொதுமக்களும் கூட்டுறவுச் சங்கத்தை நோக்கிகோபத்துடன் வந்தனர்.
அங்கு வீடியோகிராபர்களுடன் சுந்தரம்உட்கார்ந்திருப்பதைக் கண்ட பொதுமக்கள் கூட்டுறவுச் சங்க அலுவலகத்தின்கதவை வெளிப்புறமாகப் பூட்டி விட்டனர். எம்.எல்.ஏ., அதிமுக பிரமுகர்கள், நிருபர்கள் உள்பட அவருடன்வந்திருந்தவர்கள் உள்ளே மாட்டிக் கொண்டனர்.
இதையடுத்து தகவலறிந்து அங்கே வந்த சில உள்ளூர் பெரியவர்கள் சங்கத்தின் கதவைத் திறந்து சுந்தரத்தையும்மற்றவர்களையும் மீட்டனர். உடனே சுந்தரம் வேகமாக அங்கிருந்து செல்ல முயன்றார்.
ஆனால் மக்கள் அவரை வழிமறித்துக் கொண்டு, எங்களுக்கு ஒரு வழி சொல்லி விட்டுச் செல்லுங்கள் என்றுகூறினர். ஆனால் சுந்தரமோ மீண்டும் பழைய பல்லவியையே பாடினார். மழைக்காகத் தான் கஞ்சி காய்ச்சினோம்என்று கேமரா முன் சொல்லுங்கள் என்று நெசவாளர்களிடம் மீண்டும் வற்புறுத்தினார்.
உடனே நெசவாளர்கள், "எங்களுக்குக் காடோ பூமியோ கிடையாது. மழை வந்தால் என்ன, வராவிட்டால் என்ன?இலவச வேஷ்டி-சேலை திட்டம் மீண்டும் வேண்டும். நாங்கள் நெய்த துணிகளுக்கான பணம் வேண்டும்" என்றுகூறினர்.
அதற்கு பதில் கூறிய சுந்தரம், தற்போது போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டுள்ளன. புதியரேஷன் கார்டுகள் வழங்கப்பட்ட பிறகு அனைவருக்கும் இலவச வேஷ்டி-சேலை திட்டத்தை கொண்டு வருவோம்"என்றார்.
"அது வரை எங்கள் சாப்பாட்டுக்கு என்ன வழி?" என்று மக்கள் கேட்கவே, அதற்குப் பதில் கூறத் தடுமாறிய சுந்தரம்காரில் ஏறித் தப்பிக்கமுயன்றார்.
ஆனால் அங்கிருந்த சில இளைஞர்கள் அவரைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி விட்டனர். சிலர் அவரை அடிக்கவும்முயன்றனர். அவருடன வந்த ரெளடிக் கும்பல் பட்டினியால் நொந்து போய் கிடக்கும் நெசவாளர்களை பிடித்துத்தள்ளிவிட்டு அவரை காரில் ஏற்றி தப்பிக்க வைத்தனர்.
இந்தச் சம்பவம் அத்தனூரில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இத்தனை அமளிக்கும் பிறகு நேற்று பிற்பகல் நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் வந்து கஞ்சி பெற்றுச் சென்றனர்.இதே நிலை நீடித்தால் நாங்கள் சாவதைத் தவிர வேறு வழியே இல்லை என்று புலம்பியவாறே அவர்கள் சென்றனர்.
பட்டினியால் சாவுகள் நடந்துவிடாமல் தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு உண்டு. தங்கள் ஆட்சிக்குக் கெட்டபெயர் வந்துவிடும் என்பதால் பசியால் வாடுபவர்களை பொய் சொல்லச் சொல்லி தனது அரசியல் அசிங்கபுத்தியைக் காட்டிவிட்டார் சுந்தரம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications