ஜெ. ஊழல் வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் மூடல்
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகளை விசாரித்து வந்த 3 தனி நீதிமன்றங்களில் முதலாவதுநீதிமன்றத்தின் காலம் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அந்த நீதிமன்றம் மூடப்படுகிறது.
முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்கள் செய்த ஊழல்களை விசாரிப்பதற்காககடந்த திமுக ஆட்சிக் காலத்தின் போது 1997ம் ஆண்டு ஆறு தனி நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.
டான்சி, ஸ்பிக், சொத்துக் குவிப்பு, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல், லண்டன் ஓட்டல் உள்ளிட்டபத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக அமைச்சர்கள் மீது தொடரப்பட்டன.
இந்த ஊழல் வழக்குகளை தனி நீதிமன்றங்கள் தான் விசாரித்து வந்தன.
இந்த வழக்குகளில் டான்சி, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே உள்ளிட்ட சில வழக்குகளில் ஏற்கனவே தீர்ப்புகள்வழங்கப்பட்டு விட்டன.
இதையடுத்து தனி நீதிமன்றங்களில் தொடரப்பட்டிருந்த வழக்குகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்துகடந்த ஆண்டே மூன்று நீதிமன்றங்களை தமிழக அரசு மூடிவிட்டது.
மீதமுள்ள மூன்று நீதிமன்றங்களின் காலமும் கடந்த ஜூன் 30ம் தேதியோடு முடிவடைந்தது.
ஆனால் முதலாவது நீதிமன்றம் ஜூலை 31ம் தேதி (இன்று) வரை செயல்படும் என்றும் 2வது மற்றும் 3வதுநீதிமன்றங்களின் காலம் அடுத்த ஆண்டு (2003) ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
அதன்படி முதலாவது நீதிமன்றம் இன்றுடன் மூடப்படுகிறது. முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி அன்பழகன் இன்றுஓய்வு பெறுகிறார். இதற்காகவே இந்தத் தனி நீதிமன்றத்தின் காலம் நீட்டிக்கப்பட்டிருந்தது.
முதலாவது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த சொத்துக் குவிப்பு வழக்கு, ஸ்பிக் ஊழல் வழக்கு மற்றும் லண்டன்ஓட்டல் வழக்கு ஆகியவை நாளை முதல் இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
இரண்டாவது தனி நீதிமன்ற நீதிபதி ராஜமாணிக்கம் இந்த வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications