வாஜ்பாய் அரசுக்கு மம்தா ஆகஸ்டு 12 வரை கெடு

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா:

கிழக்கு ரயில்வேயைப் பிரிக்கும் முடிவை ஆகஸ்டு 12ம் தேதிக்குள் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணிகைவிடவில்லை என்றால் அந்தக் கூட்டணியிலிருந்து திரிணாமூல் காங்கிரஸ் வெளியேறும் என்று மம்தா பானர்ஜிகூறியுள்ளார்.

மேலும் இந்தக் காலக் கெடுவுக்குள் மத்திய அரசு தன்னுடைய முடிவை மாற்றாவிட்டால் ஆகஸ்டு 12ம் தேதிநடைபெறவுள்ள துணை ஜனாதிபதி தேர்தலிலும் தங்கள் கட்சி தே.ஜ. கூட்டணி வேட்பாளரான பைரோன் சிங்ஷெகாவத்துக்கு எதிராக வாக்களிக்கும் என்றும் கொல்கத்தாவில் மம்தா கூறினார்.

கொல்கத்தாவில் நேற்று நடந்த திரிணாமூல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் மம்தாமேலும் கூறியதாவது:

கிழக்கு ரயில்வேயைப் பிரிக்கும் முடிவு எடுக்கப்பட்டதற்கு அத்வானி தான் காரணம். இதிலிருந்து பிரதமர்வாஜ்பாய் ஓரம் கட்டப்படுகிறார் என்று நன்றாகத் தெரிகிறது.

வாஜ்பாயை ஒதுக்கிவிட்டு அத்வானி தான் முக்கிய முடிவுகளை எடுக்கிறார். வாஜ்பாயை யாரும் மதிப்பதில்லை.இதைச் சுட்டிக் காட்டும் தைரியம் எனது கட்சிக்கு மட்டும் தான் உள்ளது.

கிழக்கு ரயில்வேயைப் பிரிக்கும் முடிவை எதிர்த்து வரும் 5ம் தேதி மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு நடத்தமுடிவு செய்துள்ளோம். பின்னர் 12ம் தேதி வாஜ்பாய் வீட்டின் முன் தர்ணா நடத்தவும் முடிவு செய்துள்ளோம்.

அதன் பிறகும் எங்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காவிட்டால் தே.ஜ. கூட்டணியிலிருந்து விலகுவதைத் தவிரஎங்களுக்கு வேறு வழி இல்லை. இக்கூட்டணியிலிருந்து வெளியேறுவது குறித்து 13ம் தேதி இறுதி முடிவுஎடுக்கப்படும் என்றார் மம்தா.

இதற்கிடையே வாஜ்பாய் குறித்துக் கடுமையாகப் பேசியதற்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கூட்டணிக் கட்சியிடமிருந்தே இது போன்ற கடுமையான விமர்சனங்களை நாங்கள்எதிர்பார்க்கவில்லை என்று பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் மல்ஹோத்ரா நேற்று கூறினார்.

இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் இன்று முதலே திரிணாமூல் காங்கிரஸ் தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கிவிட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இக்கட்சியைச் சேர்ந்த சுமார் 7,000 தொண்டர்கள்நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+